ஆத்ம தாமரை

செல்வத்துடன் வளமாக வாழவழி

      ஆத்ம தாமர

இருதய கமலம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் அதாவது ஆத்ம தாமரை என்று பெயர் . ஆத்ம நாராயணரை குறிப்பதாகும், தாமரை ஸ்ரீ மகாலட்சுமியை குறிப்பதாகும், எவர் ஒருவர் அடிக்கடி தாமரை உருவத்தை பார்க்கிறார்களோ, தாமரை மலரைக் கொண்டு அர்ச்சனை யார் செய்கிறார்களோ. ஸ்ரீ மகாவிஷ்ணுவின் திருபாதத்தில் தாமரை மலரை இரு கைகளினால் மரியாதையாக யார் வைக்கிறார்களோ. நீர் நிலையில் தாமரையை யார் உற்பத்தி செய்கிறார்களோ. யார் பாதத்தை கண்டாலும் தாமரையை பார்ப்பது போலவே எண்ணி யார் பார்ககிறார்களோ. தன் மனதிலே தாமரை நன்கு மலர்ந்துள்ளதாகவும். அதன் மையத்தில் இறைவன் இருப்பதாகவும் எண்ணி யார் வணங்குகிறார்களோ. தாமரையை போல மலர்ந்த முகத்துடன் யார் இருக்க முயற்சி செய்கிறார்களோ. தாமரை மலரில் அன்னை மகாலட்சுமி பச்சை ஆடையில் அமர்ந்துள்ளதாக அகக்கண்ணில் யார் காண்கிறார்களோ. தாமரை மலர் நிறைந்த குளத்தை கனவில் யார் பார்க்கும் பாக்யம் கிட்டுகிறதோ. அஷ்டலக்ஷ்மி யாகத் தீயில் தாமரை மலரை பசுநெய்யில் தோய்த்து அன்னை மகாலட்சுமிக்கு யார் சமர்ப்பணம் செய்து அக்னியில் இடுகிறார்களோ. மற்றவர் முகங்களை மலர்ந்த தாமரையை கண்டால் வரும் மெல்லிய

புன்முறுவலோடு யார் காண்கிறார்களோ. ஆத்ம தாமரை எனும் மனதை யார் பாரமின்றி வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு பரிபூரண ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் அருள் கிட்டி வாழ்வில் வசந்தமாகவே இருப்பார்கள் எப்பிரச்சினையும் விலகிவிடும் செல்வமும். சந்தோஷமும். கடாச்சரமும். சுபிக்ஷம் யாவும் நிறையும் பரிபூரண மன திருப்தியுடன் மரியாதை மிக்க மகத்துவமான வாழ்க்கை அமையும், நல்லவை தானே நடக்கும், வரும் துன்பம் எதுவாயினும் நம் அறிவுக்கு எட்டும் முன்னமே அது விலகிவிடும், தெய்வ கடாட்சரத்துடன் குடும்பம் அமையும், மேற்கண்டதின் பலன் இரட்டிப்பாக கிடைக்க சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து யார் பூஜிக்கிறார்களோ அவர்களுக்கு அபரிதமான பலன் கிடைக்கும் .


                                    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *