இறை தூதரே கவனியுங்கள்

இறை தூதரே கவனியுங்கள்

ஆன்மிக சேவை செய்யும் அனைவரும் இறை தூதராவீர் . நாம் இன்று அனுபவிக்கும் துன்பம் அனைத்தும் நாம் செய்த பாவத்தின் சம்பளமாகும், எவ்வளவுக்கெவ்வளவு விரைந்து அதிகப்படியான தண்டனையை அனுபவிக்கிறோமோ அந்த அளவிற்கு பாவங்கள் சீக்கிரம் குறைந்து விடும், நான் துன்பமே அனுபவிக்க கூடாது என்று நீங்கள் பிராத்தித்தால் அந்த தண்டனை உங்கள் பரம்பரைக்கும் போய்ச்சேரும் .

எனவே உங்களோடு உங்கள் பாவம் நிவர்த்தியாக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சில சித்தர்கள் மௌனம் காத்து வேண்டுவோருக்கு எதுவும் கொடுக்காமல் இருந்துள்ளார்கள் .

எல்லா வித்தையும் கற்ற ஞானிகள் கூட மனிதருக்கு உதவிடாததின் காரணம் இதுதான் இறைநீதி மன்றத்திலும் சரி. மனித நீதிமன்றத்திலும் சரி தப்பு செய்தவன் தண்டனை பெற வேண்டும் என்பதே, எனவே தர்ம வழி செயல்பட்டு இறைவனுக்கு கட்டுப்பட்டு நடந்த ஞானிகள் சித்தர்கள் மருத்துவத்தை மக்களுக்கு கொடுத்தனர், சாஸ்த்திரத்தை மக்களுக்கு கொடுத்தனர், ஆனால் பலர் நேரிடையாக மக்களுக்கு உதவவில்லை, குறிப்பாக பாவிகளுக்கு நாங்கள் வழி காட்டியுள்ள சாஸ்திரப்படி சிறிதாவது தர்மம் செய்து ஒழுக்க வழி கடைபிடித்திருந்தால் உன் துன்பம் விலகும் மார்க்கம் உனக்கு கிடைக்கும் என கூறியுள்ளார்கள்,

நாம் இத்தனையும் மீறி பொருள் ஈட்டவும். பொது சேவை செய்யவும். புகழுக்காகவும் இறை தர்மத்தில் குறிக்கிட்டு பணிபுரியப்போகிறோம், இது மஹா பாதக புன்னிய செயல்தான், எனினும் செயல்பார்த்து தேர்ந்தெடுத்து செயல்பட புன்னிபலன் கிட்டும் .

இறைவனின் அன்பை பெருகிற ஒருவனே பாவத்தை போக்குகிறான், பிறகு மற்றவர் பாவத்தையும் போக்கி புன்னியனாகிறான் . பலர் பெரும் பாவியாகிறார்கள் .

சித்தயுகம் என்று எப்பொழுது பெருத்ததோ அப்போதே புன்னியங்கள் பெருத்தது .அறைகுறை பித்தர்கள் எப்போது பெருத்தார்களோ அதுமுதலே பாவங்கள் பெருத்து விட்டது,

ஆன்மிகவாதிகள் எந்த யுகத்தில் வளர்ந்தார்களோ அன்றே பாவங்களும் பெருகின, காரணம் பாவம் செய்து துன்பபட்ட மக்களை தன் சக்தியை சோதிக்க பாவிகளை காப்பாறியது ஒரு காரணம், அந்த செயல் பின்னால் வந்த ஒரு பெரிய சந்ததி கூட்டத்தையே அனுபவிக்கும்படி செய்து பல பாவிகளை உருவாக்க காரணமானது, மக்கள் செய்த பாவத்தால் மழையே இல்லாமல் போனது, அதை மீறி மழை பொழிந்து சித்துக்கள் செய்ய வைத்து மக்களை ஆன்மிகவாதிகள் மேல் நம்பிக்கை பெறச்செய்து தவறு

தவறுசெய்துவிட்டால் என்ன சாமியாரிடம் சென்று துன்பம் அனுபவிக்காமல் தடைசெய்து கொள்ளலாம் என்ற தைரியத்தில் மேலும் மேலும் பாவச் செயல்களை செய்தனர், அடுத்து வளர்ந்து உயர்வு புகழ் பெற்ற சித்தர்கள் மன்னர்களின் புகழ்ச்சிக்கு மயங்கி இருந்துள்ளன்ர், ஏழைகளை நெருங்க விடாமல் மன்னர்களை மட்டும் தன்னருகில் வர அனுமதித்து தன் கௌரவத்தை நிலை நாட்ட முற்பட்டுள்ளனர்,மன்னரின் சிரம் தாழ்த்திய வணக்கத்திற்கு மயங்கி மன்னர்கள் செய்த பல பாவங்களுக்கும் தீர்வுகளை ஞானிகளே கூறி அவர்களை தப்பிக்க வைத்துள்ளனர், இதனால் மன்னனின் பாவம் அவனை தேர்ந்தெடுத்து நம்பிய மக்களுக்கே போய் சேர்ந்தது, மேலும் பாவம் பெருகியது,

ஆக பாவ வளர்ச்சிக்கு ஆன்மிகவாதிகளே பெரிய காரணமாக தெரிந்தோ தெரியாமலோ இருந்துள்ளார்கள், நல்லவனாக இருந்தபோது வரம் பெற்றுவிட்டவர்கள், வரத்தை பெற்றபின் பாவிகளாக மாறியவர்கள் பலபேர் உண்டு இதை புராணமும். வரலாற்று சுவடுகளும் விளக்குகிறது, இவ்வாறு மனிதன் பாவத்தின்மேல் பாவம் செய்யும் போது தண்டனை கொடுக்கத்தான் வரமுடியுமே தவிர காப்பாற்ற எங்கே வருவது,

எனினும் இறை தூதராக உள்ளவர்கள் எல்லோருமே ஆன்மிகவாதிகள்தான், அந்த கடமையை உணர்ந்து மக்களை பாவ வழிக்கு செல்லாமல் அறிவுறுத்தி பல தர்மங்கள் செய்து. அனுபவிக்க வேண்டி தவறுக்கான தண்டனையையாவது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அனுபவித்து. சந்ததிகளையாவது பாவிகளாக இல்லாமல் உருவாக்க உதவுங்கள் . அதற்க்காக யாருக்கும் உதவி செய்யவேண்டாம் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது . வழிகாட்டுங்கள் .நல்லவனுக்கும் திருந்தியவருக்கும் உங்கள் சக்தியை பயன்படுத்தி உதவுங்கள் . ஆனால் தீயவன் அளிக்கும் பணத்திற்க்கு கட்டுப்பட்டு சக்தியை விரையமாக்காதீர்கள் . திருந்த வழிகாட்டுங்கள் .

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *