கர்ம பலன்கள்

கர்ம பலன்கள்

கர்ம பலன்கள் மூன்று. அவை பிராரப்திய கர்மம். சஞ்சித கர்மம், ஆகாமிய கர்மம் என்பதாகும். அதாவது சஞ்சித கர்மம் என்பது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டனார், முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களாகும். பிராரப்திய கர்மம் என்பது நம் இன்றைய வரை செய்த செயல். ஆகாமிய கர்மம் என்பது இவ்விரண்டும் பாவ புண்ணியங்களின் விளைவுகள் ஆகும். நம் வாழ்க்கையில் நாம் பிறக்கக்கூடிய தேதியை, நேரத்தை, நிர்ணயம் செய்வது கர்மப் பலனே ஆகும்.
உதாரணமாக ஒருவன் காலை 6-00 மணி முதல் 12-00 மணி வரை பிறந்திருப்பான் என்றால் அவன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான். கஷ்டம் தோல்வி என்பதே கிடையது. அவன் செய்யும் செயல்கள் யாவும் வெற்றியை கொடுக்கும்.
அதே போல் மதியம் 12-00 மணி முதல் மாலை 6-00 மணி வரை பிறப்பவர் வாலிபப் பருவம் வரை, வெற்றி, தோல்விகளை அனுபவித்து அவ்வனுபவ அறிவை பாடமாக்கி பின் வாழ்வில் முன்னேறுவர். வாலிப பருவம் முதல் அதிர்ஷ்டமாக இருக்கும். மாலை 6-00 மணி முதல் 12-00 மணி வரை பிறப்பவர்கள் பெற்றோரின் ஆதரவில் வளர்ந்து, அவர்களிடம் கற்று, பல திருப்பு முனைகளை கண்ட பிறகு திருமண நாள் முதல் முன்னேற்றமேற்படும். குழந்தை பிறந்ததிலிருந்து மேலும் அதிர்ஷ்டகரமாக இருக்கும். இரவு 12-00 மணி முதல் காலை 6-00 மணி வரை பிறப்பவர் அவருக்கு குழந்தை பிறந்ததிலிருந்து அதிர்ஷ்டம் பெறுவர். அதுவரை எதிர் நீச்சலிட்டு போராடும் நிலை இருக்கும்.
இதைபோல் அவன் பிறக்கும் நேரத்தை கர்ம பலன் நிர்ணயம் செய்கிறது. ஆகவே நாம் நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே கேட்டு, நல்ல செயல்களை மேற்கொள்வோமானால் நம் சந்ததியினருக்கு பயன்தருவதோடு அல்லாமல் இந்த உலகத்திற்கும் நன்மை தரக்கூடியது ஆகும். நல்ல செயல்கள் என்பது எது என்றால் தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திற்கோ, பிற்காலத்திற்கோ, உயிருக்கோ, மனத்திற்கோ, தீங்கு செய்யாத எச்செயலும் நல்ல செயல்களே என வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளார்.
இந்த நல்ல செயல்களை நாம் ஆராய்ந்து செய்வதே நம் ஆறாவது அறிவின் பயனாகும். உண்ண, உறங்க, உடுத்த என்று ஐந்தறிவுள்ள செயல்பாட்டை தவிர்த்து, ஆறறிவுள்ள மனிதனாக வாழ முயற்சி செய்வோம். இந்த நன்மை நம் கூடம்பத்திற்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்குமேயாகும்.
மக்கள் ஏன் துன்பப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு பல அறிஞர்களும், ஞானிகளும், சித்தர்களும் முயன்று சரியானபதிலை கூறமுடியவில்லை. அவர்கள் அனைவரும், கர்மா என்ற ஒன்றையே கூறிவந்தனர். கர்மபலன் என்பது ஒரு பகுதியே, முழுமையானது அல்ல. நாம் பிறக்கும் நேரத்தையும், பிறக்கும் நாளையும், கர்ம பலன் தான் நிர்ணயம் செய்கின்றது. அந்த கர்மபலனின்படி பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களும் குறிப்பிட்ட சுகங்களை அனுபவிக்க கூடியவர்களாகவும், எத்தகைய குணாதிசயங்கள் பொருந்தியிருப்பார்கள் என்பதை கர்மபலனே நிர்ணயம் செய்கின்றது.
ஆகவே தான் கர்மபலன் மட்டுமே நம் வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. உதாரணமாக ஒரு குடும்பத்தில் 4 பேர் அண்ணன், தம்பிகள் உள்ளனர் எனில், ஒரு தாய் தந்தையின் கர்மாவை வைத்து பிறக்கின்றனர். அவர்கள் 4 பேருக்கும் ஒரே கர்ம பலன் மட்டுமே இருக்க முடியும். இவர்களுக்கு இன்பமோ, துன்பமோ வசதியோ, வசதி இல்லாத நிலையோ ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஏன் ஒருவன் பணக்காரனாகவும் ஒருவன் ஏழையாகவும், ஒருவன் ஏற்றதாழ்வுகளை சந்தித்த வண்ணமும், ஒருவன் சமுதாயத்தில் குற்றவாளியாகவும் என நான்கு பேரும் பல்வேறு நிலைகளில் இருப்பதற்கு காரணம் என்ன? என சிந்தித்தால் கர்மபலன் காரணமல்ல.
கர்மபலன் நாம் செல்லக்கூடிய இலக்கை காண்விக்கிறதே ஒழிய அடைவதும், அடையாததும், கர்மப் பலன் வாயிலாக அறிய முடியாது. அதற்குமேலும், சிந்தித்தோமானால் நம்மை வழி நடத்தி செல்லக்கூடியதும். இன்பதுன்பங்களை அனுபவிக்க செய்யக்கூடியதும், இலக்கை அடைய (அ) அடையாமல் செய்யக் கூடியதுமான சர்வ வல்லமை படைத்த சக்தி எதுவென்றால் நமது பெயரே ஆகும்.
கர்மப்பலன் நமக்கு வழியை காட்டினாலும், நம் கையை பிடித்து இழுத்துச் செல்லக்கூடிய அற்புத சக்தியாக நம் பெயர் உள்ளது. ஆகவே தான் “பெயரை சர்வ வல்லமை படைத்த சக்தி” என்று கூறுகிறோம். கர்ம பலன் தோற்றத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தாலும், இந்த அறிவை, மனதை, உயிரை, இயக்கக்கூடிய மறைபொருளாக இருக்கும் பெயரை அதன் வலிமையை, ஞானிகள், விஞ்ஞானிகள் மத்தியிலும் வைக்கிறேன்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *