குண்டுமணி வசிய மகிமை

மூலிகைகள் ரகசியங்கள்

குண்டுமணி வசிய மகிமை ரகசியம்

கிரக சக்திகளை ஈர்க்கும் ஆற்றல் அதிஷ்ட ரத்தினங்களுக்கு அடுத்தபடியாக மூலிகைகளில் படர்கொடிகளில் இருந்து கிடைக்கும் குண்டுமணி விதைகளுக்கே உண்டு. தெய்வீக ஆத்மாக்களை வசியம் செய்யும் சக்தி இந்த மூலிகை குண்டுமணிகளுக்கு உண்டு. இந்த குண்டுமணி பல வண்ணங்களில் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயலுக்கு ஏற்றதாகும்.

7 வகை வண்ணங்களில் இந்த குண்டுமணி கிடைக்கிறது. 9 கிரகங்களுக்கும் இந்த 7 வகை குண்டுமணி அதிஷ்ட ரத்தினங்களைப் போல பொருந்தும். ரத்தினங்கள் எளிதான காலத்தில் அதற்கு மாற்றாக இந்த குண்டுமணியையும் பயன்படுத்தியிருக்கின்றனர். கருப்பு, வெள்ளை, சிவப்பு, பச்சை, மஞ்சள் போன்ற வண்ணங்களிலேயே பெரும்பாலும் பரவலாக குண்டுமணி கிடைக்கிறது. இதில் பச்சை வண்ண குண்டுமணி அனைத்து தொழில் முறைகளுக்கும் அதிஷ்டத்தை கூட்டித் தருபவை. எனவே உயர்வாக கருதப்படுகிறது. நவகிரகத்தில் புதன் அனைத்து கிரகங்களுக்கும் மத்திமமான பலனை தரக்கூடியவர் இவருக்கு மரகதகல்லில் நிறைந்த கதிர்வீச்சை செலுத்துவார். அடுத்தபடியாக இந்த பச்சை குண்டுமணியில் புதனின் கதிர்வீச்சு இருக்கும்.

இந்த குண்டுமணி விதைகள் எடுத்து பாதுகாத்தோமேயானால் பல காலத்திற்கு அழியாமல் இருக்கும். பூச்சிகள் இதை அரிக்காது. சொத்தை விழாது, வெப்பம் குளிர்ச்சி இவைகளை சமமாக தாங்கும் ஆற்றல் இந்த குண்டுமணி விதைகளுக்கு உண்டு. இந்த குண்டுமணியை மாந்திரீக செயல்களுக்கும், வைத்தியத்திற்கும் நிறையவே பயன்படுத்துவார்கள். ஒருவருக்கு பலகீனமான கிரகம் இருந்தாலோ, தோஷ கிரக பாதிப்பு இருந்தாலோ அதற்குண்டான குண்டுமணி விதையை தேர்ந்தெடுத்து தாயத்து குப்பியில் அடைத்து இடுப்பில் கட்டிக்கொள்ளச் சொல்வார்கள். இவ்வாறு செய்வதால் அந்த குறிப்பிட்ட கிரக தாக்கம் விலகும்.

மாந்திரீக அஷ்டகர்ம செயல்களுக்கு பெரிதும் குண்டுமணி விதையை பயன்படுத்தலாம். அக்கால சித்தர்கள் முதல் இக்காலத்தில் உள்ளவர் வரை குண்டுமணி விதையை பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் சிறு வித்தியாசம் யாதெனில் அன்றைக்கு இதன் பயன்பாட்டை சரியானப்படி பயன்படுத்தினார்கள். இன்றைக்கு உள்ளவருககு இதை எப்படி பயன்படுத்துவது என்றே தெரியாமல் இருக்கிறார்கள். இந்த குண்டுமணி பல அதிசய ஆற்றல் சக்திகளை பெற்றதாகும். அதிஷ்ட ரத்தினக்கற்கள் மின்காந்த சக்திகளை ஈர்க்கும். நாம் அணியும்போது அதன் சக்திகளை நம்மிடம் உள்ள ஜீவகாந்த சக்தியோடு உரிய பிரிவில் கலக்க உதவும். ஆனால் குண்டுமணி விதையில் மின்காந்த சக்தி, ஜீவகாந்த சக்தி, ஆத்மகாந்த சக்தி இவை மூன்றையும் ஈர்த்து தன்னகத்தே சேர்த்து வைக்கும் ஆற்றல் கொண்டதாகும். இதை அணிபவருக்கு இந்த மூன்றுவித அபரிதமான சக்திகளை சமநிலைப்படுத்தி உடலில் செலுத்தும் ஆற்றல் பெற்ற இயற்கை விதைகளாகும். அதனால்தான் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இன்றைக்கு இம்மணிகள் பலன் தராது. பாதகமும் வராது. இம்மணிகளை இருவகையில் மட்டுமே பெற்று பயன்படுத்த வேண்டும். முறையான பலன் பெறும் முறையை அறிக :- குண்டுமணி படற்கொடி வகையை சார்ந்ததாகும். சிந்தாமணி, பிரம்மமணி என்றும் இதை அழைப்பார்கள். கேட்டதை கொடுக்கும் காமதேனு என்றெல்லாம் புகழ்ந்து கூறியுள்ள நம் முன்னோர்கள் இதை பலன் பெறும் விதத்தையும் கூறிச் சென்றுள்ளார்கள். யாம் இவைகளை முறையாக பயன்படுத்தி பலன் பெற்றிருக்கிறேன்.

என் அனுபவத்தையும் சுருங்க கூறுகிறேன். முன்பு கூறியிருந்தேன். இந்த குண்டுமணிகள் கிரக ஆற்றலை பெற்றது என்று அதோடில்லாமல் தெய்வீக சக்திகள் பெற்ற ஆத்மாக்கள் இந்த குண்டுமணியில் பௌர்ணமி திதி அமாவாசை திதியில் ஆக்கிரமிப்பு செய்து அருபமான ஆத்மாக்கள் குண்டுமணி மூலமாக ரூபமாக மாறி ஜீவகாந்த சக்தியை பெற்று ஆனந்தம் கொள்ளும். இவ்வாறு குண்டுமணியில் உள்ள ஆத்மாக்களை எளிதில் அடையலாம். காணலாம். அவை தனியாக மிளிரும் தன்மையோடு இருக்கும். மின்மினி பூச்சி இரவில் மின்னும்போது ஒரு ஒளி வருமல்லவா அதைப்போல தனியாக மின்னும். ஆத்மா அமராத குண்டுமணிகள் மிளிராது. இந்த மிளிர்தல் மிக நுணுக்கமாக கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியும்.

அனைத்து குண்டுமணிகளும் பலனை பொதுவாக தரும் என நினைப்பது தவறு. தேர்ந்தெடுத்த ஏதாவது ஒரு குண்டுமணியில் மட்டுமே ஆத்ம சங்கமம் நிகழும். அதை கண்டுபிடித்து எடுத்து வந்து தாயத்தில் அடைத்து பயன்படுத்தினால் பலன் கொடுக்கும். குண்டுமணி கீழே உதிரும் முன் மிளிர்வதையே எடுத்து பயன்படுத்த வேண்டும். கீழே விழுந்த குண்டுமணியில் மின்காந்தம் இருக்கும். ஆனால் ஜீவகாந்த சக்தி இருக்காது. எனவே கொடியுடன் உதிராமல் மிளிரும் குண்டுமணியை குலதெய்வ அருளோடு கண்டுபிடித்து அதனருகில் அமர்ந்து ஒரு சத்தியத்தை செய்ய வேண்டும். எவ்வாறு எனில் வாழ்நாள் முழுக்க ஒரு தர்மத்தை கடைபிடிப்பதாகவும் அதை மீறும் போது குண்டுமணியில் உள்ள ஆத்மா விலகி தனக்கு கட்டுப்படாமல் போகலாம் என்று சத்தியம் செய்ய வேண்டும். மேலும் தான் செய்யும் தர்மத்தில் பாதியை அந்த ஆத்மாவின் மோட்சத்திற்கான பயன்பாடாக அமைய வாக்களிக்கிறேன் எனவும் சத்தியம் செய்ய வேண்டும். இவ்வாறு வாக்களித்தால் மட்டுமே அந்த குண்டுமணியில் அமர்ந்த ஆத்மா வசப்படும். மூலிகையாக இருந்தாலும் இவ்வாறே தான் செய்ய வேண்டும். இந்த முறையில்தான் குண்டுமணியை பயன்படுத்த வேண்டும்.

சக்திவாய்ந்த ஒரு குருமகான் வசப்படுத்தும் மந்திர ஜெபம் மூலமும் குண்டுமணி ஆத்மாவை வசப்படுத்தி வேறொருவருடைய நாம கோத்ர சங்கல்பம் செய்தும் அன்னாருக்கு அளித்து பலன் பெறச் செய்ய முடியும். அதை முறையாக செய்ய வேண்டும். கிடைத்துவிட்டது என்பதற்காக அப்படியே எடுத்து பயன்படுத்துவது தவறில்லை. எனினும் பலன் அதில் இருக்காது. பலன்தரும் குண்டுமணி வசப்படுத்த கட்டுப்பாடு மிக அவசியம். ஒரு ஆத்மாவை சும்மாவெல்லாம் வசப்படுத்திவிட முடியாது. அந்த ஆத்மாவின் விருப்பத்தை நிறைவேற்றவும் வேண்டும். விற்பனை செய்யும் குண்டுமணியை வாங்கினாலும் அதன் வினை தீர்த்தே வாங்க வேண்டும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *