குலதெய்வத்தின் முக்கியத்துவம்

ஆன்மிக அவசிய தகவல்கள்

குலதெய்வத்தின் முக்கியத்துவம்

        பரம்பரை பரம்பரையாக நம் முன்னோர்கள் வழிபட்டு பெற்ற சக்தியே குலதெய்வம் ஆகும். எச்செயலுக்கும் குல தெய்வத்திற்கு மரியாதை செய்து தொடங்கினால் எதிலும் குலதெய்வம் காவல் நிற்கிறது, 

வருடத்திற்கு ஒரு முறை அளிக்கும் பூஜைக்கும். எந்த காரியத்திற்கும் முதலில் நினைத்து மரியாதை செய்வதாலும் குலத்தையே காத்து நிற்கும் பொறுப்பை குலதெய்வம் ஏற்று பரம்பரையை சிறப்பிக்கிறார்கள் .

நவகிரகங்கள் தன் செயலை செய்வதானாலும். மற்றவரின் ஏவல். திருஷ்டி நம்மை தாக்குவதானாலும். காப்பு தோஷம். இறப்பு தோஷம். பெண் தீட்டு நம்மை தாக்குவதானாலும் குலதெய்வத்தின் அனுமதியின்றியோ. அதன் சக்தியை தடை செய்யாமலோ நம்மை அணுக முடியாது,

குலதெய்வத்தை முறையாக ஆராதிக்கும் போது நவகிரக தண்டனையை பெறாமல் நம்மை வழி நடத்தும். எதிரியின் சூழ்ச்சியில் இருந்து நம்மை காக்கின்றன, குல தெய்வத்தை நினைக்க பூஜிக்க மறந்தாலோ அல்லது அவமதிப்பு செய்தாலோ குலதெய்வம் விலகி விடும், அல்லது வலிமை இழக்கும், இதனால் எதிரி எந்த தெய்வமும் நமக்கு உதவாத படி நம் குடும்பத்திற்கு கட்டு கட்டலாம், அவர்கள் ஏவும் ஏவல். சூனியம் நம்மை தாக்கலாம், நவகிரகங்களும் அதன் செயல் நல்லதோ கெட்டதோ அதை தடையின்றி செய்து விடும்,

நம்மிடம் மனோ சக்தி இருந்தால் மற்ற சக்தியை எதிர்க்க முடியும், அனைவருக்கும் மனோ சக்தியை பெரும் பயிற்சி செய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை, எனவே குல தெய்வ சக்தியாவது இருக்க வேண்டும், இந்த சக்தியும் இல்லையெனில் மற்றவரின் சக்திக்கு நம்மை ஆட்டுவிக்கும் வாய்ப்பே அதிகம் உள்ளது. குறிப்பாக ஆன்மிக ஜோதிட மாந்திரிக பணியில் ஈடுபடக் கூடியவர்கள் மற்றவர்கள் வேதனையை கேட்க நேருகிறது, அதற்காக பிராத்தனையும் செய்ய வேண்டியிருக்கிறது, பாவத்தின் பங்கை பெற நிறைய சந்தர்ப்பம் உருவாகிறது, எனவே கண்டிப்பாக இவர்களுக்கு அவசியம் குலதெய்வ அருள் பெற்றேயாகவேண்டும், மற்றவருக்கும் முக்கியமே,

பரம்பரை விருத்தி அடைய பித்ரு ஆசி மட்டும் போதாது, பித்ருக்கள் காண்பித்த குலதெய்வ வழிபாடும் மிக அவசியம், குலதெய்வம் தெரியாதவர்கள் தான் இருக்கும் ஊரின் எல்லை தெய்வத்தை (காவல் தெய்வம்) குலதெய்வமாக பாவித்து வழிபடலாம் கூடவே நொச்சில் செடிக்கும் பூஜை செய்ய வேண்டும், குலதெய்வம் அறிந்தவர் நொச்சில் செடிக்கு பூஜிக்க தேவையில்லை,

ஆக குலதெய்வத்தின் முக்கியத்துவத்தை உணருங்கள், குலதெய்வமே முக்காலத்திற்கும் காப்பு தெய்வமாகும், இவர்கள் அனுமதி பெறாமல் ஒருவரும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்பதை மனப்பூர்வமாக தியானித்து நில்லுங்கள், இவர்கள் அருள் இல்லாமல் ஞான சித்துக்களை பெற முடியாது, குலவிருத்தியோடு ஞான விருத்தியை தரக்கூடியது நம் குல தெய்வம்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *