சித்தர் சமாதி ஆலயம்

சித்தர் சமாதி ஆலயம்

எண்ணாயிரம் சித்தர்களில் சில சித்தர்களின் பெயரும் இடமும் கொடுத்துள்ளேன் . இவைகளில் ஒன்றிற்க்கு மேலான இடங்கள் வரலாற்றிலும் செவிவழியாகவும் சொல்லப்பட்டுள்ளன . சித்த சமாதியை பொருத்த வரை பல குழப்பமான தகவல்கள் உள்ளன . இதற்க்கு காரணம் அவர்கள் நிலையாக ஒரே இடத்தில் வாழாததும் ஒரு காரணமாகும் . சித்தர்கள் வருகை தந்த மலைகளையும் காடுகளையும் ஆலயங்களையும் புகழ்படுத்த சித்தர் சமாதி என்று கட்டுக்கதை பல உண்டு . பல சித்தர்களுக்கு குடும்பம் இல்லாததால் வரலாற்றைச் சொல்ல நிலையான தகவல்கள் இல்லாமல் போய்விட்டன . சில சித்த சமாதிக்குத்தான்  தவரான தகவலை பதித்துள்ளார்களே தவிர எல்லா சித்த சமாதி ஆலயங்களுக்கும் அல்ல.

சித்தகுரு ஒருவருக்கு அவருக்கு பல ஊரில் இருந்து வந்த சீடர்கள் பலர்  இருப்பர் குரு சமாதியான பின்பு சீடர்கள் பலர் தத்தம் ஊர்களுக்கு திரும்பினர் அவர்கள் தம் குருவின் நினைவாக ஆலயம் எழுப்பி லிங்கத்தில் தன் குருவை ஆவஹனம் செய்து தன் குருவின் பெயரிலேயே ஆலயத்தை நிர்வகித்து  வருடாவருடம் குருவிழாவும் நடத்தி வணங்கினர் . நாளடைவில் அவை மக்களாலும் பிற்க்கால சந்ததிகளாலும் ஜீவ சமாதி என்றே வழக்கப்படுத்திவிட்டனர் . எந்த இடம் எப்படியோ எவ்விடமாக இருந்தாலும் மனசுத்தத்தோடு சித்தர்களை நினைத்தாலே போதும் பலன் நிச்சயம் உண்டு . இன்னும் பல ஆயிரம் சித்தர்கள் இருக்கிறார்கள் .

வாசி யோகி கோபால் சுவாமி . திருவில்லிபுத்துர் நரிப்பாறையில் 9 சித்தர் சமாதி

உள்ளன . திருவண்ணாமலையை சுற்றி பல 100 சித்தர் சமாதி மறைந்துள்ளன . தன்னை வெளிப்படுத்த விரும்பாத சித்தர் சமாதி பல காசியில் உள்ளன . இன்னும் நிறைய சொல்லித்கொண்டே போகலாம் . 20 மற்றும் 21 ஆம் கலி ஆண்டில் மறைந்த சித்தர் சமாதியும் பல உள்ளன . இவ்வளவு சித்தர் சமாதியும் காண வேண்டும் என ஆன்மிகர் அனைவருக்கும் ஆசைதான் எனினும் காலநேரம் அனைவருக்கும் கிடைப்பதில்லை . அதே நேரத்தில் அத்தனை பேரையும் காணவிழையும் போது குழப்பம் தான் உண்டாகும் . எனவே சிறந்த வழி ஒன்றை கூறுகிறேன் அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்க்கென்று ஒரு சித்தர்கள் அவதரித்து உள்ளனர் அவர்களை மட்டும் குறிப்பிட்ட நட்சத்திர நாளிலோ அல்லது அமாவாசை அல்லது பௌர்ணமி நாளிலோ முடிந்தால் தினசரியோ நிலையான  மனதோடு வழிபட்டால் சித்த மகான்களின் அருளை எளிதாக பெறலாம் .

மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு  தங்களுக்கு அமையும். 

வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

 மேலும் அறிக : அனைவரும் ஏதாவது ஒரு திதியில் பிறந்தவர்களே  எனவே திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள். 

சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.


எச்சரிக்கை மற்றும் கவனம்

அவரவர் மின்காந்த சக்தியை உடலில் இணைத்து கொள்ள வேண்டும் அல்லது அதை வலிமை படுத்த வேண்டும் . இறைவன் உங்களுக்காக ஒதுக்கப்பட்ட தெய்வீக அம்சங்களை மதித்திருக்கவேண்டும் . இவைகளை எதுவுமே கடைபிடிக்காமல் சமாதி வழிபாடு செய்வது பாதுகாப்பானது இல்லை. காரணம் அறிவீராக சித்துக்கள் ஆடியவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் சித்தர்களில் புன்னிய ஆத்மாவும் உண்டு பாவ ஆத்மாவும் உண்டு . இவர்களைச்சுற்றி இந்த இருதரப்பு ஆத்மாவும் உலாவும் .

(கீழே கொடுக்கப்பட்டுள்ள சித்தர்கள் யாவரும் புன்னிய ஆத்மாக்களாவர் . பல ஆயிரம் சித்தர்கள் வாழ்ந்தார்கள் ஆனால் சிலரை மட்டுமே உலகம் நம்பியது அதற்க்கு காரணம் அந்த சிலர் புன்னிய மனதுடன் இருந்ததே காரணமாகும் .) அவ்வாறு உலாவும் போது தகுந்த பாதுகாப்பு இல்லாமல் தியானிப்பவருக்கு இன்னொறு ஆத்மா உடனடியாக நுழைய வாய்ப்புள்ளது . உடனடியாக நுழையும் ஆத்மா நிச்சயம் பாவ ஆத்மாவாகத்தான் இருக்கும் . எல்லா இடங்களிலும் ஆத்மா உழன்றுகொண்டுதான் இருக்கிறது .ஆனால் அவையாவும் நல்லதை செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது . ஆனால் ஜீவ சமாதி அடைந்த ஆத்மாக்கள் அலையாமல் நிலையாக அவ்விடம் இருந்து பலனை கொடுக்கும் . என்றாலும் மாறுபட்ட சக்தி இணைப்புகளை நீங்கள் உடலில் தெறிந்தோ தெறியாமலோ புகுத்தி வைத்திருந்தால் சித்த சமாதியை நாடி வருவோரின் தீய கர்மாவுடன் அங்குழலும்“ தீய ஆத்மாவும் உங்களுக்குள் இறங்க வாய்ப்புள்ளது கவனம் .தீய ஆத்மாக்கள் அறிவுக்குபுலப்படாத துன்பத்தையெல்லாம் கொடுக்கும் தெய்வ சக்தியிடம் இருந்து தங்களை மறைக்கும் ஆற்றல் அதற்க்குண்டு கவனம் . உங்களுக்கு பொருத்தமான சித்தரை நாடுவது போல பொருத்தமான மின்காந்த சக்தியையும் உடலில் இணைந்திருக்க வேண்டியது அவசியமாகும் .


புன்னிய ஆத்மா கொண்ட உங்கள் நட்சத்திர சித்தரை நீங்கள் நாடிச் செல்கிறீர்கள் என்பதற்க்காக அவர் உடனே அருள்பாளிக்க வேண்டும் என்ற அவசியம் அவருக்கில்லை .பலமுறை முயலும் போது அவரே மனம் வைத்து அருளை கொடுத்தால் தான் உண்டு . இதுவே உங்களுக்கான மின் காந்த சக்தியை உடலில் இணைத்துகொண்டு சென்றால் முதல் தடவையிலேயே பலனை பெறலாம் . இனி தங்கள் நட்சத்திரத்திற்க்கான மின்காந்த தொடர்புடைய சித்தர்களை அறியுங்கள் .

அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.அடுத்து 

பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது. அடுத்து 

கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.அடுத்து 

ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது. அடுத்து 

மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர். அடுத்து 

திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை. அடுத்து 

புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர். அடுத்து 

பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து 

ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது. அடுத்து 

மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும். அடுத்து 

பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர்  மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.அடுத்து 

உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது. அடுத்து 

அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும். அடுத்து 

சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து 

சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து 

விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது. அடுத்து 

அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

அடுத்து 

கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார். அடுத்து 

மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது. அடுத்து 

பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.

அடுத்து 

உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும். அடுத்து 

திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து 

அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது. அடுத்து 

சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.அடுத்து 

பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை. அடுத்து 

உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம். அடுத்து 

ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது, அறிக. 

மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள். சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்.

108 சித்தர்களின்  ஜீவ சமாதி ஆலயம்

1.திருமூலர் – சிதம்பரம்.

2. போகர் – பழனி .

3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.

4. புலிப்பாணி – பழனி அருகில் வைகாவூர்.

5. கொங்கணர் – திருப்பதி, திருமலை

6. மச்சமுனி – திருப்பரங்குன்றம், திருவானைக்கால்

7. சுந்தரானந்தர் – மதுரை.

8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.

9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.

10. தேரையர் – தோரணமலை (கேரளா)

11. கோரக்கர் – பேரூர்.

12. பாம்பாட்டி சித்தர் – மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.

13. சிவவாக்கியர் – கும்பகோணம்.

14. உரோமரிசி – திருக்கயிலை

15. காகபுசுண்டர் – திருச்சி, உறையூர்.

16. இடைக்காட்டுச் சித்தர் – திருவண்ணாமலை

17. குதம்ப்பைச் சித்தர் – மயிலாடுதுறை

18. பதஞ்சலி சித்தர் – சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.

19. புலத்தியர் – பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.

20. திருமூலம் நோக்க சித்தர் – மேலை சிதம்பரம்.

21. அழகண்ண சித்தர் – நாகப்பட்டினம்.

22. நாரதர் – திருவிடைமருதூர், கருவை நல்லூர்.

23. இராமதேவ சித்தர் – அழகர் மலை மற்றும் மெக்கா ( அரபு நாடு )

24. மார்க்கண்டேயர் – கருவை நல்லூர்.

25. புண்ணாக்கீசர் – நண்ணாசேர்.

26. காசிபர் – ருத்ரகிரி

27. வரதர் – தென்மலை

28. கன்னிச் சித்தர் – பெருங்காவூர்.

29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்

30. நந்தி சித்தர் – காசி, திருவாவடுதுறை, காளங்கி.

31. காடுவெளி சித்தர் – திருக்காஞ்சிபுரம்.

32. விசுவாமித்திரர் – காசி, திருவாவடுதுறை, காளங்கி.

33. கௌதமர் – திருவருணை, திருவிடைமருதூர்.

34. கமல முனி – ஆரூர்

35. சந்திரானந்தர் – திருவாஞ்சியம்.

36. சுந்தரர் – வாரிட்சம், திருவாரூர்.

37. காளங்கி நாதர் – திருக்கடவூர், திருப்பணந்தாள்.

38. வான்மீகி – எட்டிக்குடி, திருவையாறு.

39. அகப்பேய் சித்தர் – திருவையாறு, எட்டிக்குடி.

40. பட்டினத்தார் – திருவொற்றியூர்.( சென்னை )

41. வள்ளலார் – வடலூர்.

42. சென்னிமலை சித்தர் –  நாங்குனாசேரி.( கேரளா )

43. சதாசிவப் பிரம்மேந்திரர் – நெரூர்.

44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் – பேலூர் மடம்

45. ராகவேந்திரர் – மந்திராலயம்.( ஆந்திர மாநிலம் )

46. ரமண மகரிஷி – திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.

47. குமரகுருபரர் – காசி.

48. நடன கோபால நாயகி சுவாமிகள் – காதக்கிணறு.

49. ஞானானந்த சுவாமிகள் – அனைத்து தபோவனங்கள்.

50. ஷீரடி சாயிபாபா –  ஷீரடி.

51. சேக்கிழார் பெருமான் –  மதுரை -மீனாட்சி அம்மன் கோவிலில் .

52. ராமானுஜர் – ஸ்ரீரங்கம்.

53. பரமஹம்ச யோகானந்தர் – கலிபோர்னியா.

54. யுக்தேஸ்வரர் – பூரி.

55. ஜட்ஜ் சுவாமிகள் – புதுக்கோட்டை

56. மாயவரம் சிவாலயத்தில் 52 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.

      ரயில்வே மேம்பாலம் அருகில் கும்பகோணம் சாலையில் .

   57. கண்ணப்ப நாயனார் – காளஹஸ்தி.

   58. சிவப்பிரகாச அடிகள் – திருப்பழையாறை வடதளி.

59. குரு பாபா ராம்தேவ் – போகரனிலிருந்து 13 கி.மி.

60. ராணி சென்னம்மாள் – பிதானூர், கொப்புலிமடம்.

61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி – மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.

62. குழந்தையானந்த சுவாமிகள் – மதுரை காளவாசல்.

63. முத்து வடுகநாதர் – சிங்கம் புணரி.

64. இராமதேவர் – நாகப்பட்டிணம்.

65. அருணகிரிநாதர் – திருவண்ணாமலை.

66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.

67. மௌன சாமி சித்தர் – தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.

68. சிறுதொண்டை நாயனார் – திருச்செட்டாங்குடி.

69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் – பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.

70. வல்லநாட்டு மகாசித்தர் – வல்லநாடு.

71. சுப்பிரமணிய சித்தர் – ரெட்டியப்பட்டி.

72. சிவஞான பாலசித்தர் – மயிலாடுதுறை முருகன் சந்நிதி.

73. கம்பர் – நாட்டரசன் கோட்டை.

74. நாகலிங்க சுவாமிகள் – புதுவை அம்பலத்தாடையார் மடம்.

75. அழகர் சுவாமிகள் – தென்னம்பாக்கம்.

76. சிவஞான பாலைய சுவாமிகள் – புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.

77. சித்தானந்த சுவாமிகள் – புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.

78. சக்திவேல் பரமானந்த குரு – புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.

79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் – வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.

80. அக்கா சுவாமிகள் – புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.

81. மகான் படே சுவாமிகள் – சின்னபாபு சமுத்திரம்.

82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் – புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.

83. பகவந்த சுவாமிகள் – புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.

84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.

85. சாந்த நந்த சுவாமிகள் – ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.

86. தயானந்த சுவாமிகள் – புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.

87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் – பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.

88. ஞானகுரு குள்ளச்சாமிகள் – புதுவை.

89. வேதாந்த சுவாமிகள் – புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.

90. லஷ்மண சுவாமிகள் – புதுவையிலுள்ள புதுப்பட்டி.

91. மண்ணுருட்டி சுவாமிகள் – புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.

92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் – பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.

93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) – திருவண்ணாமலை.

94. கோட்டூர் சுவாமிகள் – சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.

95. தகப்பன் மகன் சமாதி – கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.

96. நாராயண சாமி அய்யா சமாதி – நாகர்கோவில்.

97. போதேந்திர சுவாமிகள் – தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.

98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் – சென்னை பூந்தமல்லி.

99. வன்மீக நாதர் – எட்டிக்குடி.

100. தம்பிக்கலையான் சித்தர் – சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம்ஆகியுள்ளார்.

101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் – திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.

102. குகை நாச்சியார் மகான் – திருவண்ணாமலை.

103. வாலைகுருசாமி – சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.

104. பாம்பன் சுவாமிகள் – திருவான்மியூர்.

105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் – கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.

106. பெரியாழ்வார் சுவாமிகள் – அழகர் கோவில் (மதுரை)

107. மாயம்மா ஜீவசமாதி – கன்னியாகுமரி. – சேலம்

108. பரமாச்சாரியார் ஜீவசமாதி – காஞ்சிபுரம்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *