தந்திரக் கலை

தந்திரக் கலை

இயற்க்கையை எதிர்க்காமலும். தர்மத்தை மீறாமலும் . எதிரியின் பலகீனத்தை பயன்படுத்தி நம் புத்தியை மேம்படுத்தி வெல்வதோ அல்லது பயன் பெருவதோ தந்திரக்கலையாகும் .

அறிவை அறிவால் வெல்லமுடியாத போது சூழ்நிலையை சாதகமாக்கி வெல்ல முயல வேண்டும் . இதுவும் தந்திரக்கலையாகும் .

நம்மால் முடியாததை செயலை முடிக்கும் தகுதியானவரை ஏவி செயல்படுத்த வேண்டும் . இதுவும் தந்திரக்கலையாகும் .

மெய்யால் முடியாததை தெய்வத்தாலும் தெய்வத்தால் முடியாததை மெய்யாலும் முடிக்க முயல வேண்டும் . இதுவும் தந்திரக்கலையாகும் .

தந்திரம் என்பது ஏமாற்றுவது அல்ல அது ஒரு ரகசிய பிரயோகம் . ரகசியமாக இருந்தால்தான் எதிரியை சூழ்ச்சியாக வெல்ல முடியும் .

எதிரியை நேருக்கு நேர் சந்தித்து வெற்றிக்கொள்வது வீரம் . எதிரியை நண்பனாக்கி அன்பால் வெற்றி கொள்வது தந்திரம் .

உழைத்து பணம் சேர்ப்பது விவேகம் . உழைத்த பணத்தையும் உழைக்க வைத்து சம்பாதிப்பது தந்திரஅறிவாகும் .

நீங்கள் உங்கள் உழைப்பையும் பலத்தை மட்டும் நம்புவது அறிவு . இதன்கூடவே வெற்றிபெற்றவனின் வழித்தடத்தை அறிந்து முயல்வது தந்திரம் .

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக ஸ்ரீகிருஷ்ணரும் . கௌரவர்களுக்காக சகுனியும் வெற்றிக்கு கையாண்டது தந்திரம் தான் . தந்திரத்தை கையாள்பவன் உணர்ச்சி வசப்படுதலோ கோபப்படுதலோ கூடாது எதையும் எளிதில் நம்புதலும் கூடாது இதை கடைசி நேரத்தில் சகுனி மறந்ததினால் தான் கௌரவர்கள் வீழ்ச்சிக்கு காரணமானது . ஸ்ரீகிருஷ்ணன் எதையும் மறக்கவில்லை கூடவே புன்னகையும் ஒரு தந்திரம் தான் என்பதை கடைபிடித்து வெற்றியும் கண்டார் . தர்மமும் வெற்றி கொள்ளும் ஒரு தந்திர முறைதான் என்பதை உலகிற்க்கு காட்டியவர் பகவான் ஸ்ரீகிருஷ்னர் .

மூலிகை பயன்படுத்துவது . யந்திரம் . முத்திரை . ஆசனம் . ஆசனவிரிப்பு . வண்ணஆடைகள் . விருட்சங்கள் பயன்படுத்துவது . தீட்சை . முகூர்த்தம் பார்ப்பது . பட்சி ஓரை அறிவது . சரகலை பயன்படுத்துவது . அஞ்சன திலகம் இடுவது . எதிரியின் ஜாதகம் அறிவது . எதிரியின் வியர்வை பட்ட உடமையை தெறியாமல் அபகரித்து செய்வினை செய்வது . அஸ்டகர்ம மலர்கள் பயன்படுத்துவது . திசைகளை பயன்படுத்துவது . நவரத்னம் பயன்படுத்துவது . பரிகாரம் . யாகம் . உலோகம் பயன்படுத்துவது . சமர்ப்பணம் . நமஸ்காரம் . சரணம் யாவும் பயன்படுத்துவதே தந்திரக்கலையாகும் .

தந்திரம் என்பது எதிரியின் வலையில் இருந்து தப்பிப்பது மட்டுமன்று எதிரியை தன் வலையில் விழவைப்பதே தந்திரம் .

உடலில் உள்ள காற்று வெளியே போவது விதி வெளியே போன காற்றை உள்ளே இழுப்பது மதி ஆக இங்கு மதிதான் தந்திரமாகும் .

அரசன் ஆன்டியாக வேண்டும் என்பது விதி என்றால் அரசன் முந்திக்கொண்டு அரசை துரந்து சன்னியாசியானால் இதுவே தந்திரம் .

மீனை விரட்டிச் சென்று பிடிப்பதை விட துாண்டில் போட்டு மீனை நம் இடத்திற்க்கு வரவழிப்பதுவே தந்திரமாகும் .

ஆயிரம் பேரை எதிர்த்து சண்டையிடுவதை விட அக்கூட்டத்தின் தலைவனை பிடித்துவிட்டால் மற்றவரை போரிடாமலேயே வென்று விடலாம் .இதுதான் தந்திரம் .

வலிமையும் வலிமையும் மோதிக்கொள்வதை விட விட்டுக்கொடுத்து போவதே தந்திரமாகும் .

எதிரியோடு மோதுவதை விட அவனை வசப்படுத்துவதே தந்திரமாகும் .

நம் எல்லா காரியங்களையும் போராடி விரையப்பட்டு நாள் கடந்து வெற்றிபெருவதை விட தந்திரக்கலையை பயன்படுத்தி எளிதில் வெற்றிக்கொள்ளலாம் . அதற்காண முழு விபரமும் பல ரகசியங்களும் . தனிமனிதன் தந்திரக்கலையை பயன் படுத்தும் விதமும் மிக விரிவாக தெளிவாக எங்கள் மாந்திரீக சாஸ்த்திர புத்தகத்தில் கொடுத்துள்ளோம் . வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும் . தயவு செய்து கெடுதலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் .

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *