மனஅமைதியுடன் வேண்டுங்கள்

செல்வத்துடன் வளமாக வாழவழி

மனஅமைதியுடன் வேண்டுங்கள் 

நம்மில் பெரும்பாலோர், எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறோம். தேவை உள்ளவற்றிற்கு பரபரப்பாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் தேவை இல்லாதவைகளுக்கும் பரபரப்பாயிருக்கிறோம். எல்லா விஷயங்களிலும் தலையிடுகிறோம். எல்லோர் விஷயங்களிலும், தேவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் தலையிடுகிறோம். பேசுகிறோம். தேவை இல்லாமல் அதிகமாகப் பேசுகிறோம். சிறிய பிரச்சனைகளைக் கூட தாங்கிக்கொள்ள இயலாமல் மனதில் ஏற்றிக்கொண்டு, திரும்பத் திரும்ப அவற்றை நினைவில் கொண்டு வந்து நிம்மதி இழக்கிறோம். இவைகள் எல்லாம் மனதில் அமைதியை இழக்க வைக்கிறது .

வாழ்க்கையில் எல்லா நல்லவைகளும் நமக்கு வேண்டும் என்றால், மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவை இல்லாதவற்றில் தலையிடக்கூடாது. பிறர் கேட்காமல் அவர்களுக்கு அறிவுரைகள் கூறக்கூடாது . தேவை இல்லாதவற்றைக் கேட்கும்போதும், பேசும்போதும், பார்க்கும்போதும் மனம் பரபரப்பாகிவிடுகிறது.

மனதில் நான்கு வித மின்அலைகள் ஏற்படுகின்றன. அவை பீட்டா, ஆல்ஃபா, டெல்டா, தீட்டா என்பவையாகும். இந்த அலைகள் நம் மனதில் தோன்றும் எண்ணங்களின் வேகத்தைப் பொருத்தே தோன்றுகின்றன. மனம் பரபரப்பாக இருந்தால், மனதின் வேகம் அதிகமாக இருந்தால் தோன்றும் அலை பீட்டா அலை. மனம் அமைதியாக இருக்கும்போது தோன்றும் அலை ஆல்ஃபா அலை. ஆல்ஃபா அலைதான், நிதானமான சிந்தனைகளைக் கொடுக்கக்கூடியது. மன அமைதியைக் கொடுக்கக் கூடியது. இப்பிரபஞ்சத்துடன் நம்மை இணைக்கக்கூடியது. எனவே எப்போதும் மனம் பரபரப்பாக இல்லாமல் மனதை ஆல்ஃபா அலைகளில் வைத்துக் கொண்டால் மனம் அமைதியாக இருக்கும். நிம்மதி இருக்கும். நாம் நினைப்பது செயல்படுத்தப்படும். அந்த நிலையில்தான் ஆழ்மனதில் பதிப்பதும், உருவகப்படுத்திப் பார்ப்பதும், தெய்வப் படங்களைப் பார்க்கும்போது அது மனதில் பதிவதும் நடைபெறும். பரபரப்பான நிலையில் இதெல்லாம் நடக்காது.

செல்வம் பெற, மனதை அமைதியான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *