மூலிகைகளின் உண்மை நிலை

மூலிகைகள் ரகசியங்கள்

மூலிகைகளின் உண்மை நிலை :-

( முழுவதும் படியுங்கள் ரகசியம் )

மனிதனிடம் என்றைக்கு உண்மை செத்துபோனதோ அன்றே ஒரு சில மூலிகையை தவிர மற்ற மூலிகைகள் தன் ஆத்மாவை பிரித்துவிட்டன. வெரும் உடல் சமுலம்தான் வீரியம் இல்லாமல் வாழ்கிறது . வேண்டு மானால் இதை வைத்தியத்திற்கு எடுத்து பயன்படுத்தலாம். மற்றபடி சித்தர் கூறியது என்பதற்காக இன்றைக்கு அதையே நம்பி ஏமாறுவது வீண். அதற்காக சித்தர்கள் கூறியது பொய்யில்லை .

பின்னால் வந்த சித்த வைத்தியர்கள் செய்த குளறுபடி ஏராளம் இதை வெளிப்படையாக விவரிக்க விரும்பவில்லை.மெய்யன்பர்களே நீங்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதிருந்தால் உங்களோடு இதை பகிர்ந்து கொள்கிறேன். இந்த தகவல் உண்மையை விரும்புபவருக்கு மட்டுமேயாகும்.மூலிகையை விலை கொடுத்து வாங்கினால் முழுபலன் தராது . ஏனெனில் மூலிகை உயிர் உள்ளது அதுவும் ஒரு ஆத்மாதான். மனிதன் மட்டுமே ஆத்மாவை கொண்டவன் என்ற கருத்து மனிதனின் மடமைகளில் ஒன்றாகும். உயிருள்ள எல்லாமே ஆத்மாவை கொண்டவை தான்.

அந்த வகையில் மூலிகை ஆத்மா ஒருவரின் மந்திர கட்டுக்கு வசியப்பட்டு சில வேலைகளை செய்யும். இது மந்திரம் அறிந்தவனுக்கு . மந்திரம் அறியாதவன் மூலிகையை வைத்தியத்திற்கு கட்டுப்படுத்தலாம் ஆனால் செயலுக்கு கட்டுப்படுத்த முடியாது .

விலையின்றி நீங்களே மூலிகையை அறிந்து அன்போடு தனக்கு உதவுமாறு பணிந்தாலே போதும் யாவருக்கும் பணியை முடித்து கொடுக்கும். விலையென்று விற்கும்போது தன் மதிப்பை விற்பவர் மாசுபடுத்துவதால் எவருக்குமே பலன் தருவதில்லை . அடுத்து வேறொரு தகவலையும் இங்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். ஒருவர் வரம்பெற நல்லவன் கெட்டவன் என்ற தகுதியை இறைசக்தி பார்ப்ப தில்லை . தன்னை நாடுபவன் தன்மேல் பக்தியாக இருக்கிறானா என்பதை மட்டுமே இறைவன் பார்க்கிறார். வரம் பெற்றபின் அதை அவரவர் எப்படி பயன்படுத்துகிறார்களோ அது அவரவர் உரிமையாகும். விளைவு என்பது அவரவர் செயலை பொருத்தே அமையும். இந்த உண்மையை நான் கூறவில்லை, புராணங்கள் கூறுகின்றன. பல அசுரர்கள் வரம்பெறும் முன்னும் வரம்பெற்ற பின்னும் நல்லவர்களாக இருந்ததில்லை என்பதையும் தன் தவநாளில் மட்டும் இறைவனை ஒருநிலைப்பாடோடு மனதில் துதித்து வரம் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் புராணம் சுட்டிக்காட்டியுள்ளதை உணர்ந்து பார்க்க வேண்டும்.

அதேபோல் வறுமையாலும், ஆதங்கத்தாலும், விரக்தியாலும், குற்றங்கள் செய்துவிட்டு தப்பித்து தலைமறைவாக வாழ்ந்த சூழலிலும், அவமானப் பட்டு பழிவாங்க வேண்டும் என்ற வைராக்கியத்தாலும், பெற்றோர் உற்றார் யாரும் இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட சூழலிலும் இறைவழியே நிம்மதிக்கு சரியான மார்க்கம் என நாடியவர்களே பலருண்டு.அவர்களில் பலரும் ஆன்மிகத்தால் ஆட்கொள்ளப்பட்டு சக்தியும் சித்தியும் அடைந்த வர்கள் பலருண்டு. அதில் சிலர் வரம்பெற்று தன் சக்தியை சோதிக்கும் பொருட்டு தவறு செய்தவர்களும் உண்டு. இன்னும் சிலர் தன் கடந்தகால வெருப்பை தணித்துக்கொள்ள பழிவாங்கும் படலத்தை துவங்கி அழிக்கும் சக்திக்கு பயன்படுத்தியவர்களும் உண்டு. இவர்களும் சித்துக்கள் பெற்றதால் சித்தர்கள் என்றுதான் அழைக்கப்பட்டனர்.இவர்கள் தன் ஞான சக்தியால் அசைவ தந்திரங்களை நிறையவே கண்டு கையாண்டனர். அசைவ தந்திரம் என்பது உயிர்பலி, குறுக்குவழி, பிறர் உடமையை பயன் படுத்தி அவருக்கே கெடுதல் செய்தல், ஆத்மாவை தன் சக்தியால் வேதனைப்படுத்துதல், மரணம் உண்டாக்குதல் போன்றவையெல்லாம் அசைவ தந்திரமேயாகும்.

இவைகளை பரிபூரணமாக பரப்பிவிட்டவர்கள் இந்த தீயகுண வெளிப்பாடு உள்ள சித்தர்களே ஆவார்கள். இதுவும் இன்றைக்கு அரைகுறையாக அவர்கள் விட்டுச்சென்ற பதிவுகளை தவறாகப் பயன் படுத்திக்கொண்டி ருப்பவர்களும் உண்டு. இதுபோன்ற துர்குணம் கொண்ட சித்தர்கள் மறை மொழியை நிறையவே கையாண்டு பின்னால் வந்தவர்களுக்கு பெரும் குழப்பத்தை உண்டாக்கிவிட்டார்கள்.

பரிபாஷையில் தன் குறிப்புகள் பலதை எழுதிவைத்தார்கள். இவர்களுக்கு முன் வந்த நற்குணம் கொண்ட சித்தர்கள் வேறு நோக்கிற்காக கையாண்ட விஷயத்தை இவர்கள் பாதி விஷயம் வெளிப்படையாகவும் ஒருசில விஷயம் பரிபாஷையிலும் எழுதி வைத்து விட்டு சென்றார்கள். இது பெரும் குழப்பத்தை உண்டாக்கிவிட்டது என்பதை பின்னாளில் வந்தவர்கள் உணரவில்லை.

தெய்வத்தை நாடும்போது மனிதன் தன் மாமிசமான சதையை வருத்தி ஆணவம் அகந்தையை அதிலிருந்து பலியிட வேண்டும் என்றார்கள். இதை தவறாகப் புரிந்து கொண்டவர்கள் நரபலி இடவேண்டும் என புரிந்து தவறு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்து நம் ஐம்புலன்களை அடக்கி பயன் படுத்த வேண்டும் என்ற சொல்லை மனித மாமிசத்தை தின்றால் ஞானம் கிட்டும் என்று கூறிச் சென்றார்கள். இதையும் தவறாகப் புரிந்து வடஇந்திய பகுதியில் குறிப்பாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் அலகாபாத், வாரணாசி போன்ற இடங்களில் இன்றைக்கும் இறந்த மனிதனின் மாமிசத்தை ருசித்து தவம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.அர்த்தத்தை அனர்த்தம் செய்து தவறு செய்த அரைகுறை சித்தர்களின் சீடர்கள் இன்றைக்கும் பரம்பரை பரம் பரையாய் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

எனவே மெய்யன்பர்களே மூலிகைகளிலும், மை வகையிலும், பூஜை வகையிலும், மந்திரங்களிலும் பல பிரிவுகள் இன்றைக்கு நாம் கண்டாலும் அதில் 75 சதவிகிதம் பொய்தான் உள்ளது . மிகைப்படுத்தி காண்பிக்க சில தவறுகள் ஏற்பட்டதும் உண்டு.அதேபோல் நல்லது என்றொன்று இருந்தால் கெட்டதும் ஒன்று இருக்குமல்லவா. அதைப்போல சைவ தந்திரம் (தட்சணாசார தந்திரம்), அசைவ தந்திரம் (வாமாசார தந்திரம்) என்று இரண்டு பிரிவுகள் இருந்தன. இன்றைக்கும் இருக்கின்றன.

உயிர்பலி கொடுத்து காளிபோன்ற தெய்வங்களுக்கு படையல் போட்டு காரியத்தை வாமாசாரர்கள் (அசைவ வழி) சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதைபோல் எலுமிச்சை கனியை பலி கொடுத்து அதே காளிக்கு படையல் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக இரண்டு விதத்திலும் பலன் கிடைத்திருக்கிறது .

அப்படியானால் இரண்டு வழியுமே சரியானது தானே என்று முடிவு செய்துவிடாதீர்கள். இரண்டு வழிமுறையும் அவரவருக்கு சரி என்று பட்டது அதனால் அதை அவரவர் விருப்பப்படி செய்தார்கள். இவ்வாறு செய்தால் தனக்கு தேவியின் அருள் கிடைக்கும் என்று நம்பினார்கள். கூடவே தெய்வபக்தி எனும் அன்பு இருசாரரிடமும் இருந்தது . அது ஒன்று தான் இருசாரருமே வெற்றி பெற காரணமானது . அன்றி சைவமோ, அசைவமோ அல்ல என்பதே உண்மை.

எனவே மெய்யன்பர்களே அவரவர் வழியில் அவரவர் தெய்வத்திற்கு செய்ததை குறிப்பெழுதிச் சென்றார்கள். நாமோ அதைப்போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறோம். அது சரியானதா அல்லது இது சரியானதா என்றெ ல்லாம் குழப்பி கிடைத்ததை முறைக்காக கடமையாக செய்கிறோமே தவிர அதில் அன்பில்லை . அதனால் தோல்வியுறுகிறோம். இதை புரிந்துகொள்ளாமல் வேறுமுறை எதாவது கிடைக்காதா என்று தேட ஆரம்பித்துவிடுகிறோம். எனவே நம் தவறை நாமே பெருகவைத்து ஊக்குவித்துக்கொள்கிறோம் என்பதை நினைவில் வையுங்கள்.

பல பிரிவுகள், பலமுறைகள் உள்ளன அவை யாவற்றிற்கும் அடிப்படை ஆதாரம் இல்லாமல் வெற்றிபெற முடியாது . உடல், மனம், அறிவு இவை மூன்றும்தான் அடிப்படை ஆதாரம். இந்த ஆதாரமான நாம் எது சரி என்று தோன்றுகிறதோ அதை தேர்ந்தெடுத்து நம்பிக்கையோடு பாச உணர்வை வைத்து தவம் இயற்றினால் வெற்றி பெறுவோம்.

எத்தனை ஞானியர் வந்து சொன்னாலும், எத்தனை சித்த மகான்கள் வந்து சொன்னாலும் அன்பு, வைராக்கியம், நம்பிக்கை இவை இல்லாமல் வெற்றி பெற முடியாது என்றுதான் சொல்வார்கள் என்பதை மனதில் பதிய வையுங்கள். குழப்பமின்றி இருங்கள்.

எத்தனை ஆறுகள் ஓடினாலும் கடைசியில் அது சேருமிடம் கடல்தான். சங்கமிக்கும் கடலை தெய்வ சக்தி என வைத்துக் கொள்ளுங்கள். ஆறுகளை மார்க்கங்கள் என வைத்துக்கொள்ளுங்கள். மார்க்கங்கள் பல இறை சக்தி ஒன்றே எனவே குழப்பமின்றி உங்கள் தேர்வு இருக்கட்டும்.
பிற உயிரை இம்சிக்காத சைவ முறையாக செயல்கள் இருக்கட்டும். தீய சித்தர்களின் வாசனை கூட நமக்கு வேண்டாம். நீங்களும் சித்தன்தான் என்பதை மறவாதீர்கள். தெய்வத்தை நாட முயல்பவன் யாவருமே சித்தம் தெளிய முயல்பவன்தான். தெய்வத்தை நாடிவிட்டால் சித்துக்கள் கிடைத்து விடப்போகிறது அவ்வளவே. பிறகு நீங்கள் உங்கள் அனுபவத்தை பல நூலில் எழுதுவீர்கள். எனவே இதை உணர்ந்து முன்னம் சாதித்தவரையே புகழ்ந்து முயற்சி இன்றி இருப்பதைவிட நீங்கள் அவர்கள் இடத்திற்கு வர சரியான வழியை தேர்ந்தெடுத்து முன்னேறுங்கள் அதுதான் முக்கியம்.

வரம் பெற்றபின் தொழில் முறைகள் கையாண்ட நம் முன்னோர்கள் அதை குறிப்பெடுத்து வைத்துச் சென்றார்கள். இதை ஆரம்பத்திலேயே வரம் பெறும் பயிற்சி என்று போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். சிலர் குரு என்று தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்கிறவர்கள் செய்த அறியாத தவறு இன்றைக்கு வேர் ஊன்றி விழுதுகள்விட்டு படர்ந்து வளர்ந்துள்ளது .
எனவே மெய்யன்பர்களே தயவுசெய்து நம்புங்கள். நானும் உங்களை போல குழப்பத்தில் வாழ்ந்தவன்தான். நீங்கள் பல ஆயிரக்கணக்கான பணத்தை பலர் இழந்திருக்கலாம் நானோ என் பொக்கிஷமான உறவுகளை இழந்தேன். பணம் என்ற கருவி என்னிடம் இல்லாததால் அவமானப் படுத்தப்பட்டேன். வேறொருவராக இருந்தால் இழந்ததை பெறவேண்டும் என்று முனைந்திருப்பார்கள். நான் ஞானவழியை தேடினேன்.உண்மையை ஆராய இந்திய நாடெங்கும் அலைந்தேன். தொழில்முறை மாந்திரீகனை சந்தித்தேன். பலஆயிரம் பணம் கொடுத்தும், சிலரிடம் பத்திரிக்கையாளன் என்றும் பொய்சொல்லியும் எல்லாம் விஷயத்தை வாங்கினேன். மொழி தெரியாத இடத்தில் மொழி பெயர்ப்பாளரை சம்பளம் கொடுத்து அமர்த்தி தகவல் பரிமாறிக்கொண்டேன். இப்படியாக பல விஷயங்களை அவரவர் அனுபவத்தில் கூறியதை கேட்டு அதில் ஆரம்பத்தில் தெய்வ வரம்பெற முறைகள் எப்படியெல்லாம் முயல வேண்டும். எப்படியெல்லாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் தெளிவாக பயிற்சியில் கொடுத்திருக்கிறேன். இதுவே போதுமானது என்று நினைக்கிறேன்.

நீங்கள் தொழில் செய்யும்போது தன்னாலேயே உங்களுக்கு எப்படி செய்ய வேண்டும் என்பதை உங்கள் சித்தி தேவதை கூறும். அதை கடைபிடித்துக் கொள்ளுங்கள். அதுவே சரியானது. யாரும் பிறருக்கும் போதே கற்றுக் கொண்டு பிறக்கவில்லை . உண்மையான அருள்பெற்றவனுக்கு தேவதை தான் தொழில் முறை குருவாக அமையும். இது சத்தியமான அனுபவ உண்மை. இதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் இஷ்டம் .

மனவசியம் இல்லாதவனுக்கு மந்திரம் வசியமாகாது, மந்திரம் வசியமா காமல் தெய்வம் வசியமாகாது, தெய்வம் வசியமாகாமல் தொழில் பலித்தம் உண்டாகாது .எனவே யாம் கூறியுள்ள ஆழ்மன தெய்வவசிய பயிற்சிகளில் ஒன்றையாவது கடைபிடித்து பின் மந்திர உரு செய்து தெய்வ அருளை பெற்று நேர்மையாக தொழில் செய்யுங்கள்.

வெற்றிகரமான தெய்வஅருள் உள்ளவருக்கு மற்ற தந்திர உபகரணங்கள் அவசியமில்லை. ஆரம்பத்தில் சிறிது நாட்களுக்கு வேண்டுமானால் பயன்படுத்தி பிறகு தன் மனதை மட்டுமே நம்பி தவமியற்ற வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். பாலில் தண்ணீரை கலந்து வைத்தாலும் பாலை மட்டும் அன்னப்பறவை பிரித்து குடிக்குமாம். அன்னப்பறவையை முன் உதாரணமாகக் வைத்து மனிதராகிய நாமும் எவ்வளவோ போலித்தன்மை கலந்துள்ள ஆன்மிக உலகில் நல்லதை மட்டும் தேர்ந்தெடுத்து கையாளுவோம்.

மூலிகை, யந்திரம், முத்திரை, வழிமுறைகள் என எல்லாவற்றிலும் தவறுகள் கலந்துள்ளன. அதை சரிசெய்து முயல்வது நம் உரிமையாகும். நான் முடிந்தளவு ஆய்ந்து அனுபவத்தில் சரியானதை மட்டும் கொடுத்தி ருக்கிறேன். கையாண்டு பயன்பெறுங்கள்.

வரலாற்று ஆதாரத்துடன் சில மகான்களை ஆராய்ந்து பார்த்தேன். மிகச்சிறந்த அருளாளர்களையும் கண்டேன். அவர்களில் சிலரை பார்வைக்கு முன் வைக்கிறேன். புத்தர், இயேசு, திருமூலர், பதஞ்சலி, ராமலிங்கம், அருணகிரி, ரமணர், சேஷாத்ரி, ராம்சுரத்குமார், ஷீரடி பாபா, புட்டபர்த்தி பாபா, மேல்மருவத்தூர் பங்காரு அடிகள், நித்தியானந்தா, ராமகிருஷ்ணர், அரவிந்தர், வள்ளுவர், ஒளவையார், காரைக்கால்அம்மையார், படே சாகிப், மாயம்மா, அப்பா பைத்தியம் சுவாமி, தட்சிணாமூர்த்தி சுவாமி இன்னும் பல நூறு தெய்வ அருளாளர்கள் வாழ்ந்த வண்ணம்தான் இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் ஒருவர்கூட உயிர்பலியை செய்தால் தான் அருள்ஞானம் கிட்டும் என்றதை சொன்னதில்லை . இதற்கு மாறாக உயிர்வதை தெய்வ சக்தியை தடுக்கும் பாவமாக உருவாகி நம்மை அழிக்கும் என்றுதான் கூறியுள்ளார்கள். எல்லோருமே சிறந்தஅருளாளர்கள் தான் ஏதோ அவரவர் சக்திக்கு தகுந்தவாறு மற்றவருக்கு பலனை கொடுத்து சென்றார்கள். கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மெய்யன்பர்களே இந்த விஷயத்தை இங்கு நினைவுபடுத்தியதே உங்கள் சிந்தனைக்குத்தான். மேற்கண்டவர்களில் சிலரோடு பழகியிருக்கிறேன் அவர்கள் இறைநிலை கண்ட மார்க்கத்தை அலசியிருக்கிறேன். அதில் கிடைத்தது மெய்யான அன்பு, பக்தி, வைராக்யம், தன்னம்பிக்கை, ஆழ்ந்திருத்தல் , யோசிக்காதிருத்தல் , ஆசைபடாதிருத்தல் , ஒன்றே கதி என நாடியிருத்தல் இவைகளைத்தான் கடைபிடித்திருக்கிறார்கள். வேறு வகையான மை, மூலிகையை மட்டுமே சார்ந்திருக்கவில்லை. உயிர் பலியை கொடுத்ததே இல்லை என அறிந்தேன்.

சில துஷ்ட சக்திகளை வசியம் செய்தவர்களுக்கு சில அசைவ படையல் தேவைப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் தீயசக்தியின் தொடர்புள்ள ஒருவரின் குடும்பம் நன்றாகவே இல்லை என்பதே உண்மை. எனவே நீங்கள் நல்லமுறையை மட்டும் நாடுங்கள். நம் தேவைஅதிலேயே பூர்த்தி அடைந்துவிடும் . வீண்குழப்பம் வேண்டாமே என்பதற்காகத்தான் மீண்டும் மீண்டும் கூறி விஷயத்தையே கூறுகிறேன்.

வரலாற்று ஆதாரத்துடன் வாழ்ந்து மகான்கள் யாரும் அசைவ வழிபாட்டை கடைபிடிக்கவில்லை என்றே கண்டேன். அரைகுறையாய் வித்தையை கற்றவன் அவன் மன விருப்பத்திற்காக அசைவ வழிபாட்டை கடை பிடித்ததை ஆராயும்போது தெரிந்தது . நீத்தாரையும், துஷ்டசக்திகளையும் வசியம் செய்ய அசைவ வழிபாடு முறை அவசியமாகிறது என்பதும் உண்மையே. எனினும் இவர்களிடம் இருந்து பெரும் சக்தி நீடித்து இருப்பதில்லை என்பதையும் கண்டேன்.எனவே நாம் நிலையான அழியா புகழ் தரும் சக்தியை பெற சுத்த அன்பு கொண்டு கிடைக்கும் மலர்களை கொண்டு சுத்த அண்ணம் வைத்து படையல் வைத்து வழிபடுங்கள். தொடர்ந்து முயலுங்கள் தவநெறியோடு முயலுங்கள் நிச்சயம் அருள் கிடைக்கும். ஆரம்ப பயிற்சி முறைகளை எம் பயிற்சியில் கூறியபடி கடைபிடித்து வழிபாட்டை தொடருங்கள். எல்லாம் தன்னால் கூடிவரும்.

              நன்றி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *