மோட்ச செல்வ வழிபாடு

மோட்ச வழிபாடும் செல்வ வழிபாடும்

அகவழிபாடு (தன்நலம் சார்ந்தது) விஷ்ணு லட்சுமி தரிசனம் பூர்த்தி கொடுக்கும், புறவழிபாடு (பிறர்நலம் சார்ந்தது) சிவதரிசனம் அதை கொடுக்கும், பற்றுள்ள லோக சந்தோஷ வாழ்க்கை லட்சுமி பூஜை கொடுக்கும் தேவையை பூர்த்தி செய்யும் . பற்றற்ற பந்தம் அருளுக்கும் மோட்ச வாழ்க்கையை சிவ வழிபாடு கொடுக்கும் .

விவரம் அறிக வாழ்பவரை கேட்டால் குறிப்பாக இளைய வயதினர் (45 வயதிற்குள் என வைத்துக் கொள்ளலாம்) வாழ்க்கை வாழ்வதற்கே என கூறுவர், வாழ்ந்து முடித்தவர் மோட்ச வாழ்வையே விரும்புவர், மனம் சமாளித்து போனவர். வாழ்வை வெறுத்தவர்கள், வேதனை அடைந்து சோர்ந்து போனவர்கள் பித்து பிடித்து உணவு உடை வெறுத்து இந்த உலகமே மாய லோகம் இங்கு மீண்டும் பிறந்து விடக்கூடாது என வேதனைபடும் நிராசையாளர்கள் சிவ வழிபாட்டில் நிறையபேர் இருப்பார்கள் . இதில் எந்த வயதினரும் அடங்குவர் . சிவ வழிபட்டாளர்கள் பொதுவாக சந்தோஷங்களை குறைத்துகொள்பவர்களாகவோ. தர்ம ஈடுபாடு அதிகம் உள்ளவர்களாகவோ. வேதாந்தம் பேசுபவர்களாகவும். இளமை போராட்டத்தை பக்தி நெறியில் தனித்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள். சிவதத்துவம் மோட்சத்திற்குரியது, எனவே தனித்த அலங்காரமற்ற சிவலிங்கத்தை கண்டு வணங்குபவர்கள் நிச்சயம் உலகியல் வாழ்வியல் இருந்து சந்தோஷங்களை நிராகரிப்பதோ அல்லது பெற தவறும் நிலையோ உண்டாகும் .

எனவே சிவ ப்ரியர்களில் நன்கு சந்தோஷமாக வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் சிவசக்தி சேர்ந்த ஆலயத்தில் அலங்காரம் நிறைந்த லிங்க தரிசனத்தை கண்டு வழிபடவேண்டும் . அலங்காரம் இல்லையென்றாலும் அலங்கரிக்கும் வரை நீங்கள் காத்திருந்தே வழிபட வேண்டும், அல்லது அலங்கரிக்கும் சூழல் அவ்வாலயத்தில் இல்லையெனில் நீங்கள் மாலை மற்றும் பூஜை பொருட்கள் வாங்கிச் சென்று அலங்கரித்தாவது வழிபடவேண்டும், அப்போது தான் நன்மை, இல்லையெனில் மோட்ச வரம் கிட்டும் (துன்பப்பட்டு. எல்லா அனுபவங்களையும் கண்டு மோட்சம் பெறுவது), அலங்கார சிவதரிசனம் கண்டால் வாழும் வரம் கிட்டும், (தேவைகள் பூர்த்தி அடைந்து சந்தோஷ வாழ்வு கிட்டும்) லட்சுமி கடாட்சரமாக வாழலாம் .

இங்கு ஒரு தகவலை அறிக பாவிகளுக்கு சிவாலயத்தில் எந்நேரமும் இடமில்லை . மீறினால் துன்ப வாழ்வே உண்டாகும் . பாவிகளுக்கு சிவராத்தியும். பிரதோஷ வேளையிலும். ஜென்ம நட்சத்திர வேளையும். தமிழ் மாத முதல் நாளும். கிரஹன வேளையில் மட்டுமே அனுமதி, அவ்வேளையில் சிவதரிசனம் கண்டால் அவர்கள் பாவம் களைய வழி கிடைக்கும், பாவிகள் சிவாலயத்தில் வேண்டுதல் வைக்க கூடாது . குறிப்பாக பிரதோஷ வேளையில் அவ்வாறு வேண்டுதல் வைப்பது முறையல்ல, (தான் பாவியா இல்லையா என்பதை அவரவர் அனுபவ வாழ்க்கையை வைத்து முடிவு செய்யப்பட வேண்டும்) மேலும் மேற்கூறிய தகவல் பாவிகள் அகவாழ்வை விரும்பும் போது கடைபிடிக்க இந்த தகவலை கூறியுள்ளேன், (தயவு செய்து சிவனடியார்கள் ரத்ன சுருக்கமாக இந்த புத்தகத்தில் கொடுத்துள்ள தகவலை மட்டுமே முழுமையானது என கண்டு வருத்தப்படக்கூடாது ) பல அற்புத விஷயங்கள் எம்மை ஆளும் என் ஈசனை பற்றி உண்டு . யாம் சிவ தவத்தில் இருப்பதால் சிவதரிசனமே எனக்கு பெருவாழ்வு, ஆனால் எல்லோரும் சிவயோகத்தை விரும்பி அதை பேணி காக்க முடியாது . மீறினால் துன்பத்தையே அனுபவிக்கிறார்கள், அதற்கான விளக்கத்தை இங்கு வைத்தால் புரிந்து கொள்ள திரன் அற்றவர்கள் அதை தப்பாக வர்ணணை செய்யலாம் எனவே அவைகளை நீக்கி இந்த புத்தகத்தின் தலைப்புக்கான தகவலை மட்டுமே அளித்துள்ளேன் என்பதை மிக தாழ்மையுடன் லோக சிவம் அனைவரையும் வணங்கி தெரிவித்துக்கொள்கிறேன் .

சிவ ஆலயத்தை நெருங்கும் தகுதி இன்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்பது எமக்கு தெரியாது . எனினும் பேராசையை பூர்த்தி செய்ய சிவ தவத்தை கலைக்க வேண்டாம் என்பதே எம் கோரிக்கை . வீண் அல்லலை தவிர்க்கவே இதை தெரிவிக்கிறேன் .

தர்மவான்கள். புண்ணியர்கள். அன்பை வளர்க்க கூடியவர்கள். கள்ள கபடு அற்றவர்கள். சுத்த சைவர்கள். பிறநலம் கொண்டவர்கள் அனைவரும் எப்பொழுதும் எவ்வேளையும் சிவசக்தி தரிசனம் செய்யலாம் சொர்ண சக்தி. சுபிக்ஷ சக்தி பெறலாம் . சிவ தரிசனம் புண்ணிய தரிசனம் . இதை பெற புண்ணியம் நாமும் செய்ய வேண்டும், அப்போதுதான் சிவபலன் கிட்டும், இந்த தகுதி இருந்தால்தான் வாழும் வரம் பெற்று சம்சாரியாய் ஆவோம், இல்லையேல் சன்யாசம் கலந்த சம்சார வாழ்க்கையே ஏற்படும் . லட்சுமிபதி கடாட்சாரம் தர்மத்திலும். ஆலய தரிசனத்திலும் தாண்டவமாடும், ஆனால் வீட்டில் ஆடாது, நித்திரை லட்சுமியே தாண்டவமாடுவாள், எனவே சிவ தரிசனம் கண்டு பலன் பெற துடிப்பவர்கள் புண்ணிய தர்மங்களை செய்து செல்லுங்கள் செல்வ சந்தோஷத்தை ஆளுங்கள் .

    உயிரே சிவம். உடலே விஷ்ணு. உயிருக்கு தேவை மோட்சம். உடலுக்கு தேவை சந்தோஷம், யாருக்கு எது தேவையோ அதை பரிபூரணமாய் நாடுங்கள், இரண்டும் தேவையெனில் ஒவ்வொரு காலகட்டத்தில் அதை வரமாக பெறுங்கள், வரம் பெற ஏதுவாக ஆரம்பத்தில் இருந்தே தர்மம் செய்யுங்கள், அப்போதுதான் மோட்ச லட்சுமியும் கிடைப்பாள், கூடவே சுபிக்ஷ லட்சுமியும் கிடைப்பாள், (மேற்கண்டவையில் பல வேறு கருத்து மாறுதல்கள் இருக்கலாம், அது அவரவர் மனதை பொறுத்தது, எனினும் அனுபவ ஆய்வில் கிடைத்த ரகசியங்களை பரிமாறிக்கொண்டோம் அவ்வளவே . எல்லாம் ஒன்றே ஆனால் செயல்களில் வேறுபாடு உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் . மனம் செம்மையானால் அங்கு ஐஸ்வர்ய லட்சுமி குடி கொள்வாள் .


                நன்றி           நன்றி – நலம் நிறைக

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *