வசிய சஞ்சிவினி மூலிகை

மூலிகைகள் ரகசியங்கள்

வசிய சஞ்சிவினி மூலிகை

சஞ்சிவி மூலிகைகள் ஒருலட்சத்து எட்டு வகை இருக்கிறது . ( சஞ்சிவி மூலிகை என்றால்என்ன என்பதை விரிவாக அறிய இங்கே க்ளிக் செய்யவும் ) அதில் புல்லானி மூலிகையும் ஒன்றாகும் . வன அருகம்புல் என்றும், சத்ரு வசிய புல் என்றும், சித்தர் அஸ்த்திர புல், என்றும் அஷ்டதிக்கு வணங்கி என்றும், வலச்சுற்று மூலிகை என்றும், புல்குறிஞ்சான் என்றும் இதை அழைப்பார்கள் .

தெய்வீக சக்தி உள்ள இடத்தில் மட்டுமே இம் மூலிகை வளரும் மற்ற இடங்களில் எவ்வளவு முயன்றாலும் உற்பத்தி செய்யமுடியாது . கிடைக்காதவருக்கு இம் மூலிகை அரியவகையாக தோன்றும் கிடைத்தவருக்கு அவர் செய்த பாக்கியமாகவே கருதுவர் .
இம் மூலிகை வீட்டிலோ அல்லது வியாபார இடத்திலோ இருப்பது நலமாகும் . ஏனெனில் விரோதிகள் மற்றும் தரித்திரரை அவ்விடத்தில் அண்டவிடாது . எவருடைய கெட்ட திருஷ்டியையும் விலக்கிவிடும் . சர்வகாரியமும் வெற்றியாகவும் வசியமாகவும் வேண்டும் என்று மஞ்சள் பிள்ளையாருக்கு இம் மூலிகையை சூட்டினால் அக்காரியம் விரைவில் நடக்கும் .

மற்றவர் கண்ணுக்கு புலப்படாத பல சக்திகள் இம் மூலிகைக்கு இருந்தாலும் பார்ப்பவர் கண்ணுக்கு புலப்படும்படியான ஒரு அதிசயம் இம் மூலிகையிடத்தில் உண்டு . அது என்னவெனில் இம் மூலிகையில் ஒன்றை எடுத்து கை விரல்களால் பிடித்துக்கொண்டு தண்ணீரில் நனைத்து எடுத்தால் வலசுற்றாக மூன்று அல்லது ஐந்து முறை எட்டு திசையையும் சுற்றும் . இதேபோல் மீண்டும் மீண்டும் முயற்சிக்கலாம் . இதை கண்கூடாக அனைவரும் காணலாம் . நம் எச்சில் பட்டால்கூட எட்டுதிக்கும் சுற்றும் .

இம் மூலிகை நம்மிடம் இருந்தால் விலங்குகளோ விஷ ஜந்துக்களோ நம்மை தீண்டாது . வனத்தில் சித்தர்கள் தன் பாதுகாப்பிற்க்காக இம் மூலிகையில் ஒன்றை எடுத்து தலைமுடியில் சொருகி இருப்பார்கள் . எதிரியால் மந்திர திருட்டு உண்டாகக் கூடாது என்பதற்க்காகவும் இதை பயன்படுத்துவார்கள் .

முறையாக பயன்படுத்த விரும்புவோர் அறிக :-

இம் மூலிகையில் ஒன்றை கையில் எடுத்து உங்கள் விருப்ப தெய்வத்தை வணங்கி நான் விரும்பும் சகல காரியமும் தடையின்றி வெற்றியாக்கித்தாருங்கள் என்று மூன்றுமுறை மனதிற்க்குள்ளேயே கூறி பிறகு உங்கள் தெய்வ பாதத்தில் இம் மூலிகையை வைத்துவிடுங்கள் போதும் . எதிரியும் நண்பனாகிப்போவான் . அல்லது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து மேற்க்கூறியபடி பிராத்தனை செய்து அவர் சிரசில் இம் மூலிகையை சொருகி வைக்கவும் காரியஜெயம் உண்டாகும் .

குறிப்பு :-
ஒரே மூலிகையை எத்தனை தடவை வேண்டுமென்றாலும் பிராத்தனைக்கு பயன்படுத்தலாம் . பிராத்தனை எதுவாக இருந்தாலும் இம் மூலிகையைக்கொண்டு பயன்பெறலாம் . இவ்வளவு அற்ப்புதம் நிறைந்த மூலிகையை வீட்டில் எவ்விடத்தில் இருந்தாலும் நமக்கு நன்மையே அளிக்கும் . நம் கண்ணுக்குதெறியாத விரோதியையும் விலக்கும் வல்லமை இம் மூலிகைக்கு உண்டு .

                            நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *