இடது கை கால் மகிமை

செல்வத்துடன் வளமாக வாழவழி

இடது கை கால் மகிமை

 இடது கையால் ஒரு பொருளை கொடுப்பதோ வாங்குவதோ கூடாது என பெரியவர்கள் தகவலை புகுத்துவது நம் முன்னோர்களின் செயலாக இருந்துள்ளது அதை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக பொய்யான மிரட்டலையும் புகுத்தினார்கள் .

ராகு காலம் எம கண்டம். அஷ்டமி. நவமி போன்ற கஷ்ட நிவாரண நேரங்களை மக்கள் பயன்படுத்தி அருளை பெற வேண்டி நேர்வழியாக சொன்னால் யாரும் கேட்பதில்லை, உதாசீனப்படுத்துகிறார்கள், எனவே அது ஒரு மோசமான நேரம் எச்செயலையும் செய்யக்கூடாது இறைவனை மட்டுமே வழிபட வேண்டும் என்று சொல்லி பயமுறுத்தி இறையருளை பெற வைத்தார்கள், அதுபோல இடதுகையால் ஒரு பொருளை கொடுப்பதோ வாங்குவதோ மரியாதை அற்ற செயல் என இடக்கை பழக்கத்தை மக்கள் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக கூறினார்கள், இடது கையும் நம் உடலின் ஒரு அங்கம் தான் அது எந்த வகையிலும் மரியாதை அற்றதாகாது எனினும் ஏன் கூறினார்கள் என்றால்  இடது பாகம் சக்தி பாகம் அதில் இடது கை நுனி லட்சுமி ஸ்தானமாகும், (இலை. காய். கனி இவைகளின் முனை பகுதி லட்சுமி ஸ்தானமாகும்), இந்த லட்சுமி ஸ்தானத்தோடு வலது கை நுனியான விஷ்ணு ஸ்தானம் இணைந்து ஒரு தானத்தை கொடுத்த ஒரு பொருளை கொடுத்தாலோ பாதகம் இராது, தர்மம் செய்தால் தர்ம பலன் கிட்டும், கடன் கொடுத்தாலும் விரைவில் திரும்ப வரும், பாதக செயலே செய்தாலும். பாவ பணமோ பொருளோ பெற்றாலும். பாதகம் எளிதில் அண்டாது . இருகையும் சேராமல் வலது கை மட்டும்        இணைந்தாலும் பாதகம் சேராது, ( ஒரே கையால் தர்மம் செய்தால் தர்ம பலன் கிடைக்காது ) இது ஒரு புறம் இருக்க இடது கையால் மட்டும் அதாவது லட்சுமி ஸ்தானமான இடது முனை தொட்டு எந்த ஒரு பொருளை கொடுத்தாலும் சரி வாங்கினாலும் சரி நம்மிடம் மூதேவி குடி கொள்ளும், நம் அதிர்ஷ்டம் லட்சுமி கடாட்சம் எல்லாம் யாரிடம் இருந்து பொருளை பெறுகிறோமோ கொடுக்கிறோமோ, அவர்களுக்கு போய்ச்சேரும், மேலும் நாம் சேர்த்து வைத்துள்ள தர்மம் பூஜா பலன்கள் எல்லாம் விரையமாகி விடும் .

 இடது கையோடு வலது கை சேராமல் தனித்து பயன்படுத்தினால் மூதேவி வலிமையடையும் . இரு கையும் சேர்ந்தால் ஸ்ரீ தேவி வலிமையடையும், விஷ்ணுவோடு சேராமல் லட்சுமியை (இடது கை) பயன்படுத்தினால் லட்சுமி கோபமுற்று யாரிடமும் பரிமாற்றம் செய்கிறோமோ அந்த உறவை அறுப்பாள், லட்சுமியை விளக்கி விஷ்ணுவால் (வலது கை) பரிமாற்றம் செய்தால் பெரிய பாதிப்பு இராது, ஆனால் தர்மம் செய்யும் போது மட்டும் அவ்வாறு செய்யக்கூடாது, பலன் கிடைக்காது, லட்சுமியோடு இணைந்தால் தான் பலன், லட்சுமிக்கு எப்பொழுதுமே சுமங்கலி மரியாதை கொடுக்க வேண்டும், அதனால் கணவரோடு இணைந்து செய்யும் செயலே பரிபூரணம். மரியாதை. தர்ம பலன் எல்லாம் உண்டு, இல்லையேல் தரித்திர பலனே மிஞ்சும், எனவே இனிமேல் இடதால் பொருட்களை கொடுத்தோ. வாங்கியோ தங்கள் அதிஷ்டத்தை குறைத்து கொள்ளாதீர்கள் .

செடி. விதை நட்டாலும் இரண்டு கைகளால் தான் நடவேண்டும் . கையெழுத்து இடது கையால் போட்டால் அதிஷ்டம் கொடுக்கும் என்பது உண்மையிலும் உண்மை . ஆனால் ஜாமீன் கையெழுத்து போட்டால் இழப்பு தங்களுக்குத்தான் இதை உணர்ந்த அனுபவம் நிறைய இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு உண்டு, இதையெல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இடது கையால் எதையும் கொடுக்காதீர்கள். வாங்காதீர்கள். தனித்து நன்மைக்கு பயன்படுத்தாதீர்கள் என கூறினீர்கள்.

 யாரும் அதை கேட்காத போது மரியாதை என்ற யுக்தியை பயன்படுத்தி கூறினார்கள், வணக்கம். நமஸ்காரம் என்றால் இரு கரம் கூப்பியே செய்ய வேண்டும், ஒருவருக்கு ஒரு பொருளை கொடுப்பதனாலும். வாங்குவதனாலும் இரு கைகளும் இணைந்தே செய்ய வேண்டும், அவ்வாறு செய்தால்தான் மரியாதை என கூறி செய்ய வைத்தார்கள், நாம் நன்மை பெற வேண்டியே இந்த உபாயத்தை கூறினார்கள், எனவே இதை உணர்ந்து இடதுகையை முறையாக பயன்படுத்தி யோகத்தை பெருக்கிக் கொள்ளுங்கள், லட்சுமி கடாட்சத்தோடு வாழுங்கள் .

 இதை சாதாரண தகவலாக எண்ண வேண்டாம் – லட்சுமி என்றால் சுயநலம். விஷ்ணு என்றால் பிறர் நலம் லட்சுமியை யார் சுத்தபத்தமாக ஆராதனை செய்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பலன் கொடுப்பார்கள், அதனால் தான் சுயநலம் என்றேன் . விஷ்ணு ஸ்தானம் பிறநல பாகம், புராண கதையில் கூட விஷ்ணு அவதாரம் பிறர் நலனுக்காகவே வாழ்ந்ததை அறியலாம், விஷ்ணு என்றால் உழைப்பு தர்மம் எனப்படும், அதன் பலன் கொடுப்பது லட்சுமி மட்டுமே, ஆக லட்சுமியை போற்றி அவருக்கு பிடித்த செயல்களை செய்து சந்தோஷம் பெருவோமாக, மேலும் அறிக இடது நாசி லட்சுமி. வலது நாசி விஷ்ணுவாகும், இடது நாசி வழியாக காற்று போகும் போது நம் செயலை செய்தால் நமக்கு வெற்றி கொடுக்கும், ஏனெனில் நம் நலத்திற்காக (சுயநலம்) மட்டுமே பலன் தருபவர் லட்சுமி ஆவார், சுய சோதனையில் கடைபிடித்து பாருங்கள், உண்மை உங்களுக்கே புரியும், காலை எழும்போது இடது நாசியில் காற்று போனால் இடது கையை பூமியில் ஊனி எழுந்திருக்கவும், இடது காலை முதலில் பூமியில் பதிய வைக்கவும், செல்வம் பெருக வழி கிடைக்கும்.

 வெளியில் புறப்படும் போதும் முதலில் இடது காலை முன் வைத்தே நடக்க வேண்டும், வலது நாசியில் காற்று போனால் அப்போதே அறியலாம், இன்று ஊர் வேலைதான் முடியும் தன் வேலை முடியாது என்று, வீண் அலைச்சல் இருக்கலாம், அல்லது செயலை முடித்தும் நற்பெயர் கிடைக்காமல் போகலாம், ஆக லட்சுமி ஸ்தானம் என்னும் இடது பாகம் எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை உணருங்கள், லட்சுமி கடாச்சரம் பெறுங்கள், லட்சுமியை ஆதரிப்பவரும் பாதுகாப்பவரும் இன்புற்று இருப்பதற்கான காரணம் இதுவேயாகும்,

                போற்றும் இடத்தில் பொன் பொருள் சேரும், சுத்தம் சோறு போடும், பெண்ணை மதித்தால் (லட்சுமி) மண்ணை ஆளலாம், என்ற பழமொழிகள் எல்லாம் நாம் பயன்பெறவே, எனவே சிறு விஷயமும் செல்வ பெருக்கத்திற்கு துணை புரியும் என்ற நோக்கில் இதை தெளிவுபட விளக்கியுள்ளேன், பயன் பெறுவீராக,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *