கிணறும் அதிஷ்டமும்

                           கிணறும் அதிஷ்டமும்

ஆலயத்திற்குள் நுழைந்தவுடன் அவ்வாலயத்தில் கிணறு (கேணி) இருந்தால் அதில் முதலில் முகம் பார்க்கவும், பின்பு முடிந்தால் முகம் கை கால். சுத்தப்படுத்தி பின்பு தெய்வ வழிபாடு செய்யவும், ஆலயம் சுற்றி பின் இறுதியாக வந்து மீண்டும் கேணியை காண கூடாது கவனம், அறிவீராக, எப்பொழுதுமே ஆலயத்தில் உள்ள ஜலத்தை கண்ணால் உற்று கண்டாலே நம் பாவத்தில் சிறு பங்கு நாம் செய்த தர்மத்தின் பலனாக விலகும், அதுவே ஆலயம் தொழுது வரம் பெற்ற பின் வந்து இறுதியில் கேணி தண்ணீரை கண்டால் நாம் பெற்ற வரம் (பூஜா பலன் ) அனைத்தும் கேணி ஜலம் ஈர்த்துக் கொள்ளும், எனவே வழிபாடு முடித்து வீடு திரும்பும்போது கிணற்றை எட்டி பார்க்கக் கூடாது .

 ஜலத்தால் பாவத்தையும் போக்கலாம், பெற்ற வரன்களை தாரை வார்த்தும் கொடுக்கலாம், கோயில் குளம் எதையும் வாங்கிக் கொள்ளக் கூடியது, அதனால் தான் அக்காலத்தில் கோயில் சொத்துக்களை பிள்ளையில்லா சொத்துக்களையும். ஆயுதங்களையும் பாவகணக்கு சொத்துக்களையும் விற்று கோயில் ஆலயத்தில் போட்டுவிடும் பழக்கம் இருந்தது, இன்றும் பலரும் அறியாமலேயே கோயில் கிணறு குளத்தில் காசை தலையை சுற்றி போடுவார்கள். கண்டிருப்பீர்கள், இந்த முறையெல்லாம் போகும்போதே செய்வார்கள், குளத்தில் போகும் போதே செய்பவர்கள், ஆனால் கேணியில் வரும் போது காசு போட்டு பார்ப்பார்கள், இத்தவறை தெரிந்து கொள்ள வேண்டும், நம்முடைய செல்வ சந்தோஷமெல்லாம் தடைபட்டு போக இது வாய்ப்பாகும் .

 உங்களுக்கு ஒன்று தோன்றலாம், இந்த சங்கடம் வராமல் இருக்க ஆலயத்தில் கிணறோ. குளமோ இல்லாமலேயே இருக்கலாம் அல்லவா என கேட்க தோன்றும் அறிவீராக, நாம் பாவமே செய்யாமல் இருந்திருந்தால் பிரச்சினையே இல்லை, இறைவனிடம் நேராக சென்று வரங்களை பெறலாம், பாவம் இருக்கும்பட்சத்தில் வரங்களை பெற முடியாது, நம் முன்னோர்கள் பாவத்தை சேர்த்து தான் வைத்திருக்கிறார்கள், அதன்வம்ச தொடர்பாக நம்மையும். பாவியாகவே உருவாக்குகிறது, இந்த நிலைமையில் ஆலயம் செல்லும் போது பாவத்தை ஒழிக்க ஜல பார்வை செய்யாவிடில் வரங்களை பெறமுடியாது, அதனால்தான் முன்னோர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள் என அறிவீராக .

அதுசரி குளமாக இருந்தால் ஆலயம் வழிபட்டு திரும்பி வரும்போது பார்வையில் ஜலம் படுமே அப்போது நம் பூஜா பலன் ஈர்க்க படாதா என கேட்கத் தோன்றும், அதற்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நம் முன்னோர்கள் ஒரு உபாயத்தை செய்து வைத்தார்கள், போகும்போதே அந்த குளத்தில் உள்ள உயிர்களுக்கு உணவு தர்மம் செய்து விட்டு சென்றால் வரும்போது பார்வை செய்தாலும். எவ்வித பூஜா விரையமும் ஆகாது, மேலும் தர்ம பலனும் கிட்டும், நம்மிடம் தர்மம் பெற்ற எந்த ஆத்மாவும் நம்மை காக்கும் பொருப்பேற்கும், நம் தர்மத்தை பெற்று சந்தோஷப்பட்டதால் கைமாறாக நம் துன்பத்தையும் சிறிது ஏற்றுக் கொள்வார்கள், (தர்மம் கைமாறு உபாயமே ) அதனால்தான் தர்மம் செய்தேன் என பெருமைபடுவதோ. அந்த தர்மத்தை தனி செலவுக்கு பயன்படுத்துவதோ கூடாது, பலன் அளிக்காமல் போய் விடும் . எவ்வளவு தர்மம் செய்கிறோமோ அவ்வளவும் நம்மிடம் உள்ள கர்ம (பரம்பரை) பாவம் விலகிக் கொண்டே இருக்கும், யாக சமர்ப்பண தர்மத்தில் மட்டுமே கோரிக்கை கேட்கலாம், மற்றதில் கேட்க கூடாது, இறைவன் தர்ம கூலியை தானே கொடுக்க வேண்டும் . ஆக ஆலயம் செல்லும் போது உணவு தர்மம் உயிர்களுக்கு செய்து ஜல வணக்கம் செய்து விட்டு சென்றால் தர்ம பலனாக இறைவனிடம் லட்சுமி கடாட்சத்தை வாரி வழங்குவார் . இந்த முறையையும் கையாண்டு சுபிட்சம் சந்தோஷம் கடாட்சம் பெறுங்கள் .

விதி விலக்கான கிணறு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தாயார் சன்னதிக்குள் ஒரு கண்ணாடி கிணறு உண்டு, இங்கு எப்போது வேண்டுமானாலும் கிணற்றை காணலாம், வேண்டியது ஈடேறும், தாயார் அழகு பார்த்த கிணறு எனவே இதில் மகாலட்சுமி அருள் உண்டு .

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *