விநாயக சதுர்த்தியும் – குபேர காணிக்கையும்

          விநாயக சதுர்த்தியும் – குபேர காணிக்கையும்

                விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் மண்ணலான பிள்ளையார் சிலை வாங்கி வந்து அனைத்து பட்சணமும் வைத்து அலங்கரித்து அவர் வயிறு தொப்புள் மத்தியில் ஒரு நாணயத்தை பதித்து வணங்குவோம், பின்பு மூன்று தினம் கணநாதருக்கு விமரிசையாய் பூஜைகள் கொடுத்து பின்பு கங்கையில் அவரை கரைப்பது வழக்கம் இவ்வாறுதான் அனைவரும் செய்கிறார்கள் . இதில் அவர் வயிற்றில் ஒட்டிய நாணயத்தை இறைவனுக்கே சமர்ப்பிக்க வேண்டும் என்று அர்த்தம் கொண்டு அந்த நாணயத்திற்கு கற்பூரம் வாங்கி ஏற்றி வழிபட்டு கங்கையில் சேர்ப்பார்கள், இது தவறான ஒரு முறையாகும் . ஏழைகள் ஏழையாகவே இருக்க இதுவும் ஒரு காரணமாகும், வசதியுள்ளவர்கள் விஷயம் அறிந்தவர்கள் அவ்வாறு கற்பூரம் ஏற்ற அந்த நாணயத்தை செலவிடமாட்டார்கள், ஏன் என அறிக, விநாயகர் இந்த மண்ணுக்குரியவர் அ என்றால் அகரம் இதன் பாகம் மண் இதற்குரியவர் ஸ்ரீ கணபதி அவார், தெய்வமானாலும். மனிதரானாலும். தொப்புள் மகாலட்சுமி ஸ்தானம், எப்பொழுதும் இவ்விடம் சந்தோஷமாக இருக்க வேண்டும், உள்ளேயும் சரி. வெளியேயும் சரி சுத்தமாக இருக்க வேண்டும், விரதம் என்ற பெயரில் எந்நேரமும் பட்டினியாக இருந்தாலும். வயிறு காய்ந்தது நம்பி வாழும் உடல் செல்களும் வாடும் போது லட்சுமி கோபமுற்று இருக்கும், செல்வத்தையும் சுபிட்சத்தையும் சேர்ந்து அழிப்பாள், அதேபோல் தொப்புளில் பாவாடை கட்டி ஒரே இறுக்காக இறுக்குவது. தொப்புளை சுத்தமில்லாமல் வைப்பது , ஆண்களும் பெல்ட்டை போட்டு இறுக்குவது இதுபோன்ற செயல்களெல்லாம் செல்வம் கரைய கடன்காரராக வழி பிறக்கும், இன்றும் மார்வாடி பெண்களை பார்த்தால் தெரியும், தொப்புளுக்கு கீழே தான் சேலை கட்டுவார்கள், தொப்புளில் ஜவ்வாது. சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை பூசுவார்கள் . வயிறு வலிக்க. வயிறு எரிய பேசமாட்டார்கள், இவர்கள் லட்சுமி ஸ்தானத்தை உணர்ந்தவர்கள், அதனால் வயிற்றில் ஈரம் உள்ளவாரே இருக்க ஏதாவது ஒரு சுத்தமான ஆகாரத்தை சாப்பிடுவார்கள், லட்சுமிக்கு பிடித்தமான இனிப்பு உணவை விரும்பி சாப்பிடுவார்கள், தொப்புள் தெரிவது போல் சேலை கட்டினால் நம்மவர்கள் ஒரு மாதிரியாக சிந்திப்பார்கள், ஆனால அவர்களிடம் அந்த கபடு குணம் கிடையாது . மகாலட்சுமி பூஜையை வெகு சிறப்பாக செய்வார்கள், மகாலட்சுமிக்குரிய அத்தனையும் ஆதரிப்பார்கள், கடைபிடிப்பார்கள், அதனால்தான் இன்றுவரை அவர்கள் வசதியாக வாழ்கிறார்கள், செல்வ செழிப்போடு இருக்கிறார்கள்,

 ஆக தொப்புள் எல்லோருக்குமே மகாலட்சுமி ஸ்தானம் அந்த மகாலட்சுமி கணபதியின் வயிற்றில் வாழ்கிறார், குறிப்பாக தொப்புள் பகுதியிலேயே அன்னை மகாலட்சுமி வாசம் செய்கிறாள், விநாயகரிடம் செல்வ கோரிக்கை வைக்கக்கூடியவர்கள், அவர் தொப்புளை பார்த்து வழிபட்டால் செல்வம் நிச்சயம் கிடைக்கும், மக்களுக்கு தேவையே முதலில் செல்வம் தான் என்பதை உணர்ந்த ஞானிகள் பிராப்தம் உள்ளவர்கள் அவர் தொப்புளை பார்த்து வழிபட்டு தேவையை பெறட்டும் என விநாயகரின் உருவத்தை பானை வயிராக வரைந்து அதில் பெரிய தொப்புளை வரைந்தார்கள்,அன்று இருந்தவர்கள் இந்த சூழ்ச்சுமத்தை புரிந்து விநாயகர் சதுர்த்தி அன்று அவர் தொப்புளில் செல்வ எண்ணம் வர நாணயத்தை பதித்து வழிபட்டார்கள், அதை அவர்கள் ரகசியமாக ஒரு செயலையும் செய்தார்கள், அந்த நாணயத்தை குபேர வரமாக பாவித்து பணப்பெட்டிக்குள் ஒரு மஞ்சள் தோய்த்த துணியில் கட்டி குபேர மூலையில் வைத்து விடுவார்கள், அதை எப்பொழுதும் தொட மாட்டார்கள், பரம்பரை பொக்கிஷமாக சேகரிப்பார்கள் .அதிகம் சேர்ந்ததை வீட்டின் தென்மேற்கு மூலையில் பானையில் போட்டு புதைத்து விடுவார்கள் . அதை ஒரு போதும் செலவு செய்ய மாட்டார்கள், இவ்வாறாக கடைபிடித்த சில வருடங்களிலேயே மிகப் பெரிய செல்வந்தர்களாக வலம் வந்தார்கள்

 அப்போதைக்கு இருந்தவர்களுக்கு ஒரு பழக்கம் இருந்தது செல்வம் சேரும் தகவல்களை சாமான்யருக்கும் போய்ச் சேர்ந்தால் நம்மை மதிக்காத அளவிற்கு செல்வத்தை சேர்த்து விடுவார்கள் என எண்ணி ரகசியம் என காத்தனர் . இவர்கள் அப்போதைக்கு கடைபிடித்த விஷயம் யாதெனில் நாங்கள் பிள்ளையார் வயிற்றில் வைத்த நாணயம் தொப்புள் உள்ளே சென்று மறைந்து விட்டது என கூறி உண்மை தகவலை மறைத்தனர், அறியாதவரும் நம் நாணயத்தையும் விநாயகர் ஒரு நாள் தொப்புளில் மறைத்து கொள்வார் அப்போது நாமும் வசதி படைத்தவராக வாழ்வோம் என நினைத்து வருடா வருடம் விநயாகர் தொப்புளில் நாணயம் பதிப்பது அதை அக்னிக்கு இறையாக்கி குபேர சம்பத்தை பெற தகுதி இழந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் .

பிராப்தம் பெற்றவர் விஷயம் அறிந்தவர்கள் முறையாக அந்த நாணயத்தை தெய்வ சொத்தாக பாதுகாக்கிறார்கள் . இதை படிக்கும்போது தாங்களும் விஷயம் அறிந்ததால் பிராப்தம் உள்ளவராக ஆகின்றீர்கள் . எனவே தாங்களும் குபேர காணிக்கையாக பாவித்து பிள்ளையார் தொப்புள் நாணயத்தை சேகரித்து வையுங்கள் மேற்கூறியதை கதையாக பாவித்துவிடாதீர்கள் . நடைமுறையில் ஒருதடவை கையாண்டால் கூட அதன் பலன் உங்களுக்கு தெரியவரும், அனுபவத்தில் நீங்களே உணருங்கள் .

 மேலும் ஒரு முக்கிய தகவல் அறிக, மண் பிள்ளையார் வாங்கி வந்து பூஜித்து பின் கங்கையில் சேர்ப்பது நம் வழக்கம் அல்லவா அதை நம் குடும்பத்தை சேர்ந்த யாராவது ஒருவர் கையில்தான் கங்கையில் சேர்க்க வேண்டும், முடியாவிட்டாலும் வீட்டிலேயே வைத்திருந்து முடியும் போது சென்று கங்கையில்  சேர்க்க வேண்டும், வேறொருவர் கையால் சேர்ப்பிக்க கூடாது, நோய் அண்டும், சுபம் தடைபடும், எவ்வளவு செல்வம் இருந்தாலும் பலன் அற்று போகும், எனவே குடும்ப நபர் யாராகிலும் ஒருவர் கையால்தான் ஜலத்தில் சேர்ப்பிக்க வேண்டும் . அட்டை பிள்ளையார் உகந்ததல்ல  (விநாயகர் அடர்ந்த ஒரு இறைவன் அவர் வடிவமானாலும் உள்ளே காலியாக இருக்க கூடாது, மண். கல். உலோகம் உருவம் அடர்ந்திருக்கும் ) அதனால் ஊருக்கே கூட தோஷம் உண்டாகும்  எனவே தவிர்ப்பது நலம் . தரித்திரம் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும், நாம் தான் அனைத்தையும் உணர்ந்து மதித்து செயல்பட வேண்டும், எச்சூழலிலும் லட்சுமி கடாட்சம் நம்மை விட்டு அகலக்கூடாது என்பதில் உறுதியாக இருங்கள் .

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *