ஆத்மாவும் தண்ணீரும் அதிஷ்டமும்

                       ஆத்மாவும் தண்ணீரும் அதிஷ்டமும்

தன் செலவில் கிணறோ. போர்வெல் எடுத்து ஊர்மக்கள் பலன் பெற அதை பயன்படுத்தினால் மிகுந்த லட்சுமி கடாட்சரம் உண்டாகும் . நீங்கள் செலவு செய்து எடுத்த நீர் நிலையில் எவ்வளவு பேர் தண்ணீர் எடுத்து பயன்படுத்துகிறார்களோ. எவ்வளவு உயிர்கள் அதில் பருகி தாகம் தணிகிறதோ. எத்தனை பேர் இறை அபிஷேகத்திற்கும். இல்ல பூஜைக்கும் உங்கள் தண்ணீரை பயன்படுத்துகிறார்களோ அவ்வளவும் பிரதி உபகாரமாக உங்களுக்கு சொர்கம் போல் வாழ்வு அமையும் . அநீதி செய்பவன் கூட இந்த முறையை கையாண்டு சுவர்க்க வாழ்க்கை வாழ்ந்த சரித்திரம் உள்ளது .

 தீயவனையும் வாழவைக்கும் பரிகாரத்தில் இது முதன்மையானதாகும், மேற்கண்ட உபகாரத்தை செய்யும் போது பிரதி உபகாரம் எதிர்பார்த்து செய்யக்கூடாது பலன் குறையும் . தன் சேமிப்பில் வீணாய் உறங்கும் செல்வம் நாலுபேருக்கு பலன்தர எண்ணினால் இந்த பரிகாரத்தை முதலில் செய்வது நன்று . தண்ணீரால் மட்டுமே உடனடியாக ஆத்மாவை சாந்தபடுத்தமுடியும், (இரண்டாம் பட்சமே சுயகட்டுப்பாட்டால் சாந்தபடுத்த முடியும்) உலக உயிர்களின் பெரும் தேவையே தண்ணீரில் தான் அடங்கியுள்ளது . 

ஆத்மா நாராயணரை குறிப்பதாகும், தண்ணீர் லக்ஷ்மியை குறிப்பதாகும், இவை ஒன்றோடு ஒன்று ஈர்ப்புள்ளது . பசியை பொருத்து விடலாம் ஆனால் தாகத்தை பொறுக்க முடியாது, நாராயணரின் பரிபூரண ஆத்மா லட்சுமியிடம் தான் லயித்திருக்கும், அதனால்தான் எந்த ஆத்மா தண்ணீரை புனிதமாக பாவிக்கின்றதோ அவர்களுக்கு லட்சுமி நாராயணனின் அருள்கிட்டும்.

தவித்தவருக்கு தண்ணீர் தானம் செய்தால் அவர் ஆத்மா சாந்தம் அடைந்து சந்தோஷப்படுவது போல் உங்கள் வாழ்வில் அந்த சந்தோஷம் தங்கும், நிலையாக உங்கள் இல்லத்தில் ஆத்ம  நாராயணமும் ஜல லக்ஷ்மியும் தங்கி ஆசி வழங்கிக்கொண்டே இருப்பார்கள், ஆத்மார்த்தமாக ஜலத்தை தானம் செய்ய வேண்டும்  அப்போது கிடைக்கும் பலன் சந்தோஷம் மட்டுமல்ல, புகழும்தான், தன் காலத்திற்கு பின்பும் தர்மம் செயலாற்றிக் கொண்டே இருக்க வேண்டுமானால் கிணறு குளம் போல் ஒரு பரிகாரம் வேறில்லை . அதனால்தான் அக்காலத்திலேயே மன்னர்கள் இந்த முறையை கையாண்டு அழியா புகழ் பெற்றார்கள் இதுவே முதல் பரிகாரம் .

 தன் காலத்திற்கு பின்னும் தன் பரம்பரைக்கும் தன் ஆத்மாவிற்கும் பலன் கிடைக்க தண்ணீர் பரிகாரம் செய்து வைக்கலாம், முடியாதவர்கள் மரங்களை நட்டு வைத்து வளர்த்து வரலாம், இது உங்கள் காலத்திற்கு பின்னாலும் நிழல் கொடுத்து தர்மத்தை சேர்த்து தரும், தர்மம் செய்தால் மகாலட்சுமி அருள் கிட்டும், அன்னையின் அருள் கிட்டினால் எந்நிலையிலும் யாவரும் சந்தோஷமாக இருக்காலாம் . மேலே கூறியுள்ள பரிகாரம் நிலையான பரிகாரம் . ஒருமுறை செய்தால் தானே தர்மம் உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கும் அற்புத பரிகாரமாகும் . தனக்கு பின்னால் தன்னை நினைத்து திதி கொடுக்கக்கூட யாரும் இல்லையே என ஏங்குகிறவர்கள் அந்த கவலையின்றி இப்பரிகாரத்தை செய்யலாம் . எந்த லோகத்திலும் மகாலட்சுமின் கருணையை பெற்று குபேர வாழ்வு வாழலாம் .

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *