கனவும் அதிஷ்டமும்

                         கனவும் அதிஷ்டமும்

நமக்கு தூக்கத்தில் உண்டாகக்கூடிய தெய்வீக கனவுகளை யாரிடமும் கூறக்கூடாது, அவ்வாறு கூறினால் தெய்வ அனுகிரஹம் போய்விடும் . கனவு பலன் நல்லதோ  கெட்டதோ நாம் அன்றாடம் வழிபடும்  மனதிற்கு பிடித்த தெய்வத்திடம் ரகசியமாக மனதிற்குள்ளேயே கூறி வேண்டிக்கொள்ளவும் . இவ்வாறு செய்து வந்தால் எல்லா நிலைகளிலும் யோகம் பெறுவோம், இது தெய்வ கனவுகளுக்கு பொருந்தும் .

 உயரே பறப்பது , தண்ணீரை காண்பது , நிர்வாணமான ஆண் அல்லது பெண்ணை காண்பது இது போன்ற கனவுகள் செல்வத்தை தரக்கூடிய கனவுகளாகும், இதையும் யாரிடமும் கூறக்கூடாது  கற்பனை செய்யாத காட்சிகளே கனவில் வரவேண்டும் அதுவே நிஜ கனவு .

 தெய்வத்தால் நேரில் அனுகிரஹம் ùச்ய்ய நம் பாவ உடலால் தடை ஏற்படும், அதனால் உடல் விழிப்பில்லா நேரத்தில் நம் ஆழ்மனமும் அமைதி அடைந்த நேரத்தில் பெண் பாகமான இடது மூளை செயல்படும் நேரத்தில் ( சுப ஆத்மாவாக நாம் இருந்தால் ) அல்லது ஆசியோ. பெற்றிருந்தாலும்  புண்ணிய úக்ஷத்திரம் சென்று வந்தாலோ. நல்ல எண்ணங்களோடு நாலெள்ளாம் இருந்திருந்தாலோ.  தர்மம் செய்திருந்தாலோ நமக்கு இறைவன் அருள்புரிய கனவில் வரம் கொடுப்பார், அந்த  வரமே கனவு, சில அச்சுறுத்தல்கள் இருந்தாலும் நாம் செய்த நற்செயல்களுக்கு பலான முன்கூட்டி நமக்கு காட்டி கொடுக்கவும். கனவுமூலம் எச்சரிப்பார் .

எந்த கனவு எப்படி பலன் என்று உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை எந்த கனவு கண்டாலும் காலை எழுந்ததும் குளிக்கும் தண்ணீரில் சிறிது உப்பு போட்டு தலையுடன் சேர்ந்து குளித்து விடவும் வீடு முழுக்க மஞ்சள் நீர் தெளிக்கவும் .  கெட்ட கனவே தாங்கள் கண்டிருந்தாலும் அன்னை மகாலட்சுமியின் கருணையோடு சுப கனவாக மாறும் . எண்ணத்தில் ஆழமாக பதியக்கூடியதும் கனவில் வரும் என்பது நிரூபண உண்மையே, அதனால்தான் முன்னோர்கள் எப்பொழுதும் நல்லதையே சிந்தனை செய்யுங்கள் என்றார்கள், உறங்கச் செல்லும் முன் இறைவனை பிரார்த்தனை செய்து விட்டு பின்பு உறங்கச் செல்லுங்கள் என்றார்கள், எண்ணங்களில் நிலையாக பதியக்கூடியது அப்படியே பலித்தமாகும், அதில் தீய நினைவுகள் இருந்தாலும் அப்படியே பலித்தமாகி நமக்கு தொந்தரவு கொடுத்துவிடும், எனவே எப்போதும் நமக்கு நியாயமான தேவையை மட்டும் வேண்டி இரவில் படுத்தால் அன்னை மகாலட்சுமி அதனை பெருகச் செய்வார்கள் . சுபஎண்ணம் உள்ளவருக்கு மகாலட்சுமி கனவில் அப்படியே நடக்க ஆசி வழங்குவார்கள், தீய எண்ணம் கொண்டு படுத்துறங்கச் சென்றால் அன்னை மூதேவி அப்படியே நடக்கட்டும் என ஆசி வழங்கி விடுவார்கள், ஒரு கனவு கற்பனை இல்லாமல் உண்மையானதாக இருக்க வேண்டும், ஆழ்ந்த உறக்கத்தின் போது இக்கனவுகள் வரும், சிலருக்கு பாதி உறக்கத்திலும் வரும், நீங்கள் கற்பனை செய்யாத காட்சிகள் வந்தாலே அதுவே உண்மை கனவு எனவே சுபவளம். செல்வ வளம் வேண்டுவோர் தினசரி உறங்கச் செல்லும் முன் அன்னை மகாலட்சுமியை வணங்கி பின்பு உறங்கச் செல்லுங்கள், தினசரி இதுபோலவே செய்யுங்கள், பின்பு நடக்கும் அதிசயத்தை காணுங்கள், உங்கள் வாழ்வில் புது உலகம் பிறக்கும் யோகமாவீர்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *