கார்த்திகை மாத வளம் கொழிக்கும் நாள்

                                    கார்த்திகை மாத வளம் கொழிக்கும் நாள்

 ரம்பா திருதியை என்றொரு நாள் உண்டு, இது வருடத்திற்கு ஒருமுறை வரும், இன்று அன்னை மகா சக்தியையும். திருமகளையும். சரஸ்வதி தேவியையும் ஒன்றாக பாவித்து கௌரியாக உருவகப்படுத்தி யார் விரதம் இருந்து வழிபட்டாலும் அவர்களுக்கு செல்வ வளம் பெகும், இழந்த பதவி கிடைக்கும், வறுமை தரித்திரம் விலகும், இந்த நாள் ஒவ்வொரு வருடமும் வரும் கார்த்திகை மாதம் அமாவாசை கழித்த மூன்றாம் நாள் திருதியை திதி அன்று தான் இந்த யோக நாள், கௌரி பூஜை தீபாவளி அமாவாசை அன்று நோம்பிருந்து செய்வார்கள், தங்க நகை சிறிது வைத்து பூஜை செய்வார்கள், இன்றும் அதே போல் செய்யலாம், முடிந்த பலகாரம் வைத்து செய்தால் போதும், இந்த நாள் அட்சய திரிதியை பலன் என்னவோ அதே பலனே இதற்கும் உண்டு . வீட்டில் பூஜை செய்ய வசதி இல்லாதவர்கள் மகிழ மரத்தின் கீழ் இரணடு சுத்த பசு நெய் தீபம் இரண்டு ஏற்றி 21 முறை சுற்றி வரவேண்டும், பொதுவாக யாவருமே இந்த முறையை இந்த ஒருநாள் கையாளலாம், முப்பெரும் தேவியரின் அருள்கிட்டும், மகிழ மரத்தடியில் அன்னை எப்பொழுதும் தவம் செய்யும் இடமாகும், அங்கு யார் வேண்டினாலும் நடக்கும், அன்னை வரம் தரும் நாள் இந்த ஒருநாள் மட்டுமே, எனவே அன்றைக்கு உபவாசம் இருந்து வழிபட சகல செல்வமும் நமக்கு கிடைக்கும் . இந்த ரகசியத்தை தேவேந்திரன் ரம்பைக்கு கூறி ரம்பை பூலோகம் வந்து இந்த நாளில் கௌரியை வழிபட்டு இழந்த பதவியும். பொலிவும். செல்வமும் பெற்றதாக ஐதீகம் .

 ரம்பை விதிமுறை மீறிய ராட்சத நடனம் ஆடியதால் கலைமகள் மகாசரஸ்வதி கோபம் கொண்டு பொலிவிழக்க தண்டனை அளித்தார்கள் இந்த பூஜை செய்ய எத்தனித்ததால் அன்னை சக்தி ரம்பையை மன்னித்தார்கள், பிறகு அன்னை மகாலட்சுமி இழந்ததை பன்மடங்காக கொடுத்தார்கள், அந்த நாள்தான் கார்த்திகை மாத வளர்பிறை திருதியை திதி இன்று ரம்பை வணங்கி அருள் பெற்றதால் ரம்பா திருதியை என்றே வணங்கலாயிற்று, இது ரம்பைக்கு மட்டும் அல்ல யாவருக்கும் பொதுவானது . எனவே முப்பெரும் தேவியாக அன்னை கௌரியை பாவித்து வழிபட சகலமும் பெருக்கமாகும் சுபம் இருந்தால் சுபம் பெருகும், தீயதும் மன்னிக்கப்படும் மீண்டும் தீயது செய்ய மாட்டேன் என அன்னையிடம் சத்தியம் செய்தாள் உடனே மன்னிக்கப்படுவீர், சகல வளங்களையும் பெறுவீர் .

 இந்த பூஜையை துர்காதேவி சன்னதியிலும். சரஸ்வதி தேவி சன்னதியிலும். மகிழ மரத்தடியிலும். மயிலுடன் கூடிய குழந்தை முருகனை மடியில் அமரவைத்துள்ள சக்தி உருவ படத்தை பார்த்தும் வழிபடலாம், இன்று சுமாரான பொருள் எது வாங்கினாலும் பெருகும் என்பதால் அனைவரும் ஆசைபடுவது பொன் நகைமேல்தான், எனவே நகை வாங்கி வந்து பூஜித்தால் அது பெருகும் என்பது ஐதீகம், மனதளவில் நாம் சுத்தமாய் இருந்து வேண்டிக்கொண்டாலே எல்லாம் நலமாய் அமையும், இந்த மாதம் உற்பத்திக்குரிய சூரியன் மங்களங்களை அருளும், செவ்வாய் வீட்டில் இருப்பார், இந்த நாளில் மகிழ்ச்சிக்குரிய சந்திரன் வளர்ந்து கொண்டிருப்பார், மூன்று சக்திகளின் அருளும் கிட்டும், திருதியை திதி இவைகள் எல்லாம் சேரும் நாள் என்பதால் யாவருக்கும்

 செல்வ சந்தோஷம். ஆரோக்ய வாழ்வு கிட்டும் . அழகான ஒரு பெண் உருவ பொம்மையை ரம்பையாக பாவித்து அலங்கரித்து ஒவ்வொருமாதமும் வரும் வளர்பிறை திருதியை திதியில் வழிபட்டால் அழகும் அணிகலனும் சேரும் , நாட்டியத்தில் புகழ் பெறலாம், சந்தோஷமான வாழ்வும் கிட்டும், தொடர்ந்து செய்ய முடியாதவர்கள் இந்த கார்த்திகை மாத வளர்பிறை திருதியை திதியை மட்டுமாவது அனுசரித்து பூஜியுங்கள், சிறப்புண்டாகும் .

வீட்டிலேயே பூஜிப்பவர்கள் மஞ்சளிலேயே அன்னை கௌரியை பொம்மையாக பிடித்து அலங்கரித்து வழிபடலாம், கௌரி பூஜை முடித்து ரம்பா பூஜை செய்யலாம், மந்திரம் தெரிந்தால் தான் பூஜிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, உள்ளத்தையும். உடலையும். வீட்டையும் சுத்தபத்தமாக வைத்து சாதாரணமாக தாம்புளம் வைத்து முடிந்தால் நைவேத்யமாக பால். பழம். பலகாரம் வைத்து மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்தால் போதும் அன்பாக வேண்டிக்கொள்ளுங்கள், போதும் பிறகு நாளெல்லாம் வளர்பிறைதான், இந்த பூஜை மட்டுமல்ல செல்வ வசியம் தரும் பூஜைகளை வடக்கத்தியர்கள் மிக விமரிசையாக எப்பொழுதும் கொண்டாடுவார்கள், நாம் தான் மறந்து போய் விட்டோம் . ஏனெனில் இதுபோன்ற நாட்களை உணர்த்தியது நம் முன்னோர்களே, அதன்பிறகே மற்ற மாநிலங்களுக்கு பரவியது, அவர்கள் இதை பற்றிக் கொண்டார்கள், நாம் எப்பொழுதும் போல் விட்டுவிடுவோம், இனியாவது இழந்ததை நாமும் பெறுவோம், இனிய பலன்களை பெறுவோம் .

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *