செம்பு உலோக நீர்

                             செம்பு உலோக நீர்

செம்பு சொம்பில் தண்ணீர் ஊற்றி வைத்து காலை வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என விஞ்ஞானம் கூறுகிறது . அதைவிட சிறந்த பலன்கள் பல செம்பில் உண்டு . செம்பு சொம்பில் தண்ணீர் ஊற்றி குடித்தால் தான் தரித்திரம் ஒழிந்து உடலில் ஆற்றல் சக்தி கூடும்  இதனால் லட்சுமி கடாட்சாரம் பெருகும், செம்பு உடம்பில் பட்டாலே தரித்திரம் விலகும், அதனால்தான் ஆலயங்களில் செம்பினால் ஆன சாமி உருவம் பதித்த டாலர் விற்பனை செய்கிறார்கள், யந்திரம் எழுதினாலும் செம்பு தகட்டிலேயே எழுதுகிறார்கள், தாயத்து குப்பி கூட செம்பிலேயே இருக்கும், செம்பு பரிபூரண சூரிய சக்தியை உறிஞ்சக்கூடிய உலோகமாகும் . சூரியனே உயிர்ப்புக்கு உரியவர் ஆவார் எனவே செம்பை காப்பு செய்து கையில் அணியலாம், செம்பு டாலர் போட்டுக்கொள்ளலாம், செம்பு சொம்பில் தண்ணீர் வைத்து குடித்தால் ஆண்மை சக்தி பெருகும், அணுக்கள் உடலில் கூடி குழந்தை பாக்கியம் உண்டாகும், உடலில் வசிய சக்தி உண்டாகும், சூரியனே உலகின் அனைத்து உயிர்களின் வசியக்காரன் ஆவார், அவர் சக்தி நிறைந்த உலோகம் செம்பு என்பதனால் அதை பயன்படுத்துபவருக்கு தலைமை பண்பு கிட்டும் .

 பெரும்பாலான தெய்வ யந்திரங்கள் எழுதப்படுவது அக்கால முதலே செம்புவில் தான். சிறந்த மின் கடத்தியும் செம்புதான், தங்கத்தில் செம்பு சிறிதளவாவது கலந்தால்தான் நகைகள் உருவாகும், இருடியம் எனும் அனுப்பொருளை தக்க வைக்கும் ஆற்றல் செம்புவிற்கு உண்டு, இடியால் உருகாமல் அதன் சக்தியை கிரகிக்கும் ஆற்றல் செம்புவிற்கு உண்டு, செம்பினால் செய்யப்பட்ட பிரமிடுகள் சிறியதானாலும் மிக சக்தி வாய்ந்ததாகும், சக்தி வாய்ந்த தெய்வ சிலைகளெல்லாம் செம்பினால் செய்யப்பட்டவையே, செம்பினால் செய்யப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் இருந்த போது மக்கள் நேர்மையை பரவலாக கடைபிடித்தனர், ஆக செம்பு மிகச்சிறந்த சக்தி வாய்ந்த உலோகம், அது அனைத்திலும் சிறந்த வசிய உலோகமாகும், இதில் பரிபூரண மகாலட்சுமி அருள் நிறைந்திருப்பதால் இந்த செம்பு உலோகத்தில் திருவிளக்கு செய்து அதில் தீபம் ஏற்றினால் அஷ்டலட்சுமி அருள் நிச்சயம் கிட்டும், ஆலயத்தில் தீர்த்த பாத்திரம்கூட செம்பிலேயே இருக்கும், புகழ்பெற்ற பழம் பெரும்நடிகர் தியாகராஜ பாகவதர் தினசரி செம்பு சொம்பில் தண்ணீர் குடித்தே புகழ் பெற்றார், வாஸ்து குறைபாட்டை கூட செம்பு கம்பிகள் சரிசெய்யும் செம்பு பாத்திரங்களை பயன்படுத்திய குடும்பம் புகழ் பெற்றதாகவே இருந்திருக்கிறது .

அக்காலத்தில் செம்பு குடம்  ஒன்று சீதனமாக கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது . ஆக செம்பு உலோகம் மகாலட்சுமி அருள் பெற்றுள்ளதால் அனைவரும் பயன்படுத்தி அன்னையின் அருளை பெறுங்கள், அக்காலத்தில் செம்பு குடம் யாரிடம் உள்ளதோ அவர்கள் வசதி படைத்தவர்களாக கருதப்பட்டனர், பணக்காரர்கள் தினசரி செம்பு குடத்தில் ஜலம் வைத்து பருகி விடுவார்கள், ஏழைகள் என்ன செய்வது என்று யோசித்த முன்னோர்கள், இதற்கு ஒரு தீர்வாக ஆலயத்தில் தீர்த்தம் வழங்க செம்பு பாத்திரத்தையே பயன்படுத்தினர், தினசரி யார் தீர்த்தம் பருகிறார்களோ அவர்கள் லட்சுமி கடாட்சரத்துடன் தீர்க்காயுசுடன் இருப்பர், இது அக்காலத்திலிருந்தே நிரூபிக்கப்பட்ட உண்மை . இன்று மக்கள் ஆரோக்கியத்தில் அக்கரை எடுத்துக்கொள்வதில்லை, வந்த பின்பு எதுவானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்து விடுகிறார்கள், ஆனால் செல்வம் சேர்ப்பதில் மட்டும் ஆர்வம் பெருகிக் கொண்டே போகிறது, அவ்வாறு செல்வ பெருக்கம் வேண்டுவோர். இந்த முறையை கையாண்டாலே போதும், கொஞ்ச கொஞ்சமாக உயர்நிலைக்கு வருவீர்கள், இது உறுதி, தீய சக்திகளை விரட்டும் சக்தி செம்புவிற்கு உண்டு, அனைவரும் இதன் பயனை கொண்டு அன்னை மகாலட்சுமியின் அருளை பெறுக, வளமோடு நலமோடு வாழையடி வாழையாக வாழ்க .

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *