செல்வ உயர்வை தரும் செவ்வாய் கிழமை

                   செல்வ உயர்வை தரும் செவ்வாய் கிழமை

செவ்வாய் மங்கள நாள் இன்று பொருள் எதுவாங்கினாலும் தொடர்ந்து வாங்க பணம் வந்து கொண்டே இருக்கும். பொருளும் பெருகும். வெள்ளி செல்வநாள் தெய்வத்திடம் நம் தேவைக்கான வேண்டுதலை கூற ஏற்ற நாள். இன்று அன்னை மகாலட்சுமி சன்னதியிலோ அல்லது அம்மன் சன்னதியிலோ சுப வேண்டுதலை வைத்தால் பலிக்கும். சனிக்கிழமை இன்று வரங்களை பெரும் நாள் அரச மரத்தை தீபம் இரண்டு ஏற்றி 21 முறை வலம் வந்தால் வேண்டிய வரம் கிட்டும். அரச மரத்தை லக்ஷ்மி கணபதியாக பாவித்து வணங்கி வரவும். செல்வ கடாட்சரம் பெருகும். மேற்கண்ட மூன்று தினங்களும் செல்வ வசிய நாட்களாகும். இந்த மூன்று தினங்களிலும் காவி ஆடை அணிந்து தெய்வத்திடம் வரம் கேட்கக் கூடாது . மற்ற எந்த ஆடை வேண்டுமானாலும் இருக்கலாம். எனினும் கருப்பு காப்பி வண்ண ஆடைகளையும் தவிர்ப்பது நலம். செந்நிற ஆடை, வெண்ணிற ஆடை, பசுமைநிறம் , மஞ்சள் நிற ஆடை ஏற்றதாகும். மேலும் மேற்கூறிய மூன்று தினமும் அமாவாசையில் வந்தால் பொன், பொருள் வாங்கக் கூடாது , தடை உண்டாகும். திருஷ்டி உண்டாகும். பித்ரு தரித்திரம் உண்டாகும். எனவே சுபமங்கள நாளாயினும் இன்று அமாவாசை திதி என அறிந்தால் தவிர்க்கவும். மற்ற திதி எனில் கவலையில்லை. இந்த நாட்களில் நகை வாங்கினாலும், ஆடைகள் வாங்கினாலும், மற்ற வீட்டு உபயோக பெருட்கள் எதுவாங்கினாலும் அதை பூஜை அறையில் வைத்து வழிபட்டு பின்பு கையாள்வது மேலும் மங்களங்களை பெறுக உதவும்.

 மேற்கண்ட மூன்று தினங்களில் பொருட்கள் எதுவாயினும் செவ்வாய்கிழமை வாங்குவதுதான் சிறப்பு. இந்த நாளில் வீட்டில் பெண்கள் விலக்கு நாளானால் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும். ஒரு அசுப நிகழ்வுக்கு சென்றபின் கடைக்குச் சென்று பொருள் வாங்கி வருவதையும் தவிர்க்கவும், பொருட்கள் வாங்கிக் கொண்டு வரும்போது வேறொருவர் வீட்டிற்கு சென்று பிறகு தங்கள் வீட்டிற்கு வருவதையும் தவிர்க்கவம். பொருள் வாங்கினால் நேராக நம் வீட்டிற்கு வரவும். அல்லது ஏதாவது ஆலயம் சென்று விட்டுக்  வீட்டிற்கு வரலாம். பொருட்கள் வாங்கி வந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினாலும் அவர்கள் மன சந்தோஷம் போல் சுபிக்ஷம் பெருகும் . எப்பொருள் வாங்கி வந்தாலும் இறை வணக்கத்திற்கு பின் குபேர பார்வை மூளையில் (தென்மேற்கு மூளை) சிறிது நேரமாவது வைத்து பின்பு பயன்படுத்தவும். விலைமதிப்புள்ள பொருட்கள் வாங்கினால் மனம் மகிழ்ந்து ஆசி வழங்கும் குணமுடைய பெரியவர் யாராவது வீட்டில் இருந்தால் அவர்களிடம் பொருளை கொடுத்து ஆசிபெற்று பின் பயன்படுத்தலாம். அவ்வாறு பெரியவர் இருந்தும் அவர் குணம் பொறாமை கொண்டது என தெரிந்திருந்தால் பெரியவர் தானே என்று ஒப்புக்காக கூட ஆசி வழங்குவது நல்லதல்ல . அவர் தவறான எண்ண அலைகள் அப்பொருளில் பாய்ந்து  பாதிக்கும். தரித்திரம் உண்டாகும். தங்க நகை வாங்கினால் இறைவனுக்கு அணிவித்து அழகு பார்த்து நாம் பயன்படுத்தினாலும் சிறந்தது . புதுத்துணி அணிந்தால் பழைய துணிமேல் சிறிது நேரம் அமர்ந்தெழுந்தாலும் சிறந்ததே. மேலும் மேலும் தடையின்றி பொருள் சேரும். பயன்படுத்தி பலன் பெறுக.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *