தீட்டும் தரித்திரமும்

                         தீட்டும் தரித்திரமும்

தீட்டான பெண்கள் 5 தினங்கள் முடியாதவர்கள் மூன்று தினங்களாவது உப்பு. பணப்பெட்டி. நகை. துணி பெட்டி. சமையல் அடுப்பு. அரிசி மரம் செடிகள் கொடிகள் இவைகளில் கைபடாமல் பார்த்துக் கொள்ளவும் . சூழ்நிலையால் முடியாதவர்கள் கைகளில் நிறைய மஞ்சள் பூசி. கால்களிலும் நிறைய மஞ்சள் பூசி குளித்து பின்பு தொடலாம், (கை கால்களுக்கு மஞ்சள் பூசும் பழக்கமே இதற்குத்தான் உண்டானது ) இல்லை எனில் நிச்சயம் தரித்திரம் தொடரும் . வீட்டில் அந்த ஐந்து தினங்கள் வீடு முழுக்க மஞ்சள் நீர் நன்கு தெளிக்க வேண்டும், குறிப்பாக தீட்டான பெண்கள் கைபடும் பொருட்கள் மேல் தெளிப்பது நலம் . படிக்கும் பெண்கள் புத்தகத்தை கூட தொடக்கூடாது, புத்தகத்தை தொடாமலும் இருக்க முடியாது எனவே மேலே சொன்ன மஞ்சள் பூசும் முறை சிறந்த பரிகாரமாகும் .

அக்காலத்தில் தீட்டு பெண்களுக்கு தனி அறையே கொடுத்திருந்தார்கள், இன்றைக்கு அது இல்லை, ரத்த வாடை வீட்டில் வீசினாலே லட்சுமி தேவி அவ்விடத்தில் குடிகொள்ள மாட்டாள், தீபம் எங்கு எறிகிறதோ அங்கு லட்சுமி தோன்றுவாள், அவ்விடத்திலே தீட்டு வாடை வீசினால் லட்சுமி விலகி விடுவாள், அவள் விலகும் போது ஐஸ்வர்யத்தையும் கொண்டு சென்று விடுவாள் .

எனவேதான் மக்கள் பயந்து அன்றாடம் தீபம் ஏற்றுவதை தவிர்த்தார்கள், குறிப்பாக தீட்டு நாட்களில் தீபம் ஏற்றுவதை நிறுத்திக் கொண்டார்கள் . வெள்ளிக்கிழமை ஒரு தினம் சுக்ர (அசுர குரு) குரு நாள் என்பதால் அன்று மட்டும் தீபம் ஏற்றும் வழிமுறையை பின்பற்றினார்கள், இன்று இதுவே வழக்கமாக மாறிவிட்டது . தினம் தீபம் ஏற்றுவது சிறந்த வழியாகும், அவ்வாறு தினம் தீபம் ஏற்றுபவர்கள், தீட்டு நாட்களில் பூஜை அறைக்கு செல்ல வேண்டாம் . வீட்டில் உள்ள மற்றவர் வீடு முழுக்க சாம்பிராணி புகை போட்டு தீபம் ஏற்றலாம் . இவ்வாறு தீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கண்டவாறு இருந்தால் நிச்சயம் செல்வ சந்தோஷத்தோடு பரம்பரை தழைக்கும்.

இதையெல்லாம் இன்று ஆதிகால முறை என குதர்க்கம் பேசி நடைமுறை மாறியதால் தான் பல குடும்பங்கள் லட்சுமி கடாட்சரம் இன்றி பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள், எனவே கவனத்தில் வைத்து செய்யுங்கள் . அதே போல் உடலில் வெட்டு காயமோ. அடிபட்டோ ரத்த காயம் உள்ளவரும் தீபத்தை ஏற்றக்கூடாது, அசைவ உணவை சாப்பிட்டும். உயிர்பலி செய்தும். முடிவெட்டியும். குளிக்காமல் தீபத்தை ஏற்றக்கூடாது பிறகு எந்த பொருளை தொட்டாலும் தொலங்கவும் தொலங்காது முடி வெட்டியிருந்தால் குளித்துவிட்டுத்தான் மற்ற பொருட்களை தொட வேண்டும், அசைவ உணவு சாப்பிட்டிருந்தால் ஒரு எலுமிச்சம்பழ சாறை பருகிவிட்டுத்தான் மற்ற பொருட்களை தொட்டால் துலங்கும், இல்லையேல் தரித்திரமே தாண்டவமாடும், குடும்பத்தில் கலகமே குடிகொள்ளும் . அதே போல் வணிக ஸ்தாபனமாக இருந்தாலும் கல்லாவில் தீட்டோடு கை வைக்கக்கூடாது, தீட்டோடு உப்புமேல் எவர் கை வைத்தாலும் அவர் எந்நிலையில் இருந்தாலும் தாழ்வது உறுதி எனவே இதுபோன்ற தவறுகள் இருந்தால் தவிர்த்து அஷ்டலட்சுமி கடாட்சத்தோடு வாழுங்கள் .

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *