தீபமும் சுத்தமும் அதிஷ்டமும்

                          தீபமும் சுத்தமும் அதிஷ்டமும்

பூஜை அறையில் தீபம் எரியும் போது பெருக்கக்கூடாது . குடும்பத்தில் உள்ளவர் யாரும் அவ்வேளையில் குளிப்பது. பல் தேய்ப்பது. பாத்திரம் கழுவுவது. துணி துவைப்பது. சத்தமிட்டு பேசுவது , உறங்குவது , வெளியே புறப்படுவது , தானம் செய்வது , கிழிந்த துணி தைப்பது. தலை சீவுவது , எண்ணெய் தேய்ப்பது , வீட்டை துடைப்பது , ஒட்டடை அடிப்பது , வீட்டோடு சேர்ந்த இணைப்பு கழிவறையில் மலம் ஜலம் கழிப்பது , அழுவது , அசுப சொல் கூறுவது. சத்தமிட்டு சிரிப்பது , தொலைக்காட்சியில் மனம் மூழ்கியிருப்பது , சாப்பிடுவது போன்ற செயல்களை செய்யக்கூடாது தீபத்தை அமைதிபடுத்திவிட்டுத்தான் எதையும் செய்ய வேண்டும், இல்லையேல் தரித்திரம் பிடிக்கும் . லட்சுமி கடாட்சரம் வீட்டில் குறைந்து கொண்டே வந்து இறுதியில் மீளா துன்பத்தில் ஆழ்த்திவிடும் கவனம், இதுபோன்ற சிறுதவறுகளால் துன்பம் கொஞ்ச கொஞ்சமாக நாம் அறியாவண்ணம் உள்புகுந்து  நம்மை துன்ப பெருங்கடலில் ஆழ்த்தி விடும் .  தீபம் ஏற்றினால் தானே பிரச்சனை தீபமே ஏற்றாமல் இருந்தால் இந்த தொந்தரவே இல்லையே என நினைக்கக்கூடாது தீபம் ஏற்றுவதால் குடும்பத்தாரின் ஆற்றல் அறிவு சக்தி பெருகும் சுபிக்ஷ வரம் கிட்டும், வரும் சோதனைகளை வெல்லும் சக்தி கூடும், தரித்திரம் ஒழியும், அன்றாடம் நாம் இல்லத்தில் உறங்குகிறோம், பல் தேய்க்கிறோம், துணி துவைக்கிறோம். தலை சீவுகிறோம். சத்தமிடுகிறோம், இன்னும் ஏனைய நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன, இரவு உறவு புனிதமானாலும் ஒருபுறம் தரித்திரத்தையும் தரும் இந்த சிறு சிறு தரித்திரம் தீபம் ஏற்றுவதால் மட்டும் விலகும், இல்லையேல் அந்த வீடு வீடாக இருக்காது .

மற்ற மதத்தில் தீபம் ஏற்றும் பழக்கம் இல்லையே என தவறுதலாக நினைக்க வேண்டாம், எல்லா மதத்திலும் அக்னியை கொண்டு வணங்கும் முறை உண்டு, லட்சுமி கடாட்சரம் பெறுவதும்

அனைவருக்கும் பொதுவானதே, எனவே தீபம் எரியும் வேலையில் மட்டும் சற்று விலக்கி வைப்பது நம் நன்மைக்குத்தான் என்பதை உணருங்கள் . நம் சிறு சோம்பல்தனமும் அலட்சியமும் நம் லட்சியத்தையே கெடுத்துவிடும் என்பதை உணருங்கள் . நாம் செய்யும் தவறுக்கு பிரயாசித்தமும் நாம் தான் செய்ய வேண்டும் . மேற்கண்ட தவறுகளால் எந்த தெய்வத்திற்கும் கோபம் வராது, அந்த நிகழ்வுகள் யாவும் இயல்பே எனினும் தீய சக்திகள் பற்று கொண்டு குடும்பத்தில் தங்க அந்த நிகழ்வுகள் வழி வகுக்கும், எனவே தீபம் எறியும்போது மேற்கண்டவைகளை தவிர்த்தால் சுப சக்திகள் இல்லம் தேடி வருவர் தரித்திரங்களை விரட்டுவர், மகாலட்சுமி குடிகொண்டு செல்வ சந்தோஷத்தை கொடுப்பார் .

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *