தீர்த்த மகிமை

                               தீர்த்த மகிமை

 ஆலயத்தில் மூலவரின் ஆரத்திற்கு பின் தீர்த்தம் வழங்குவார்கள் அந்த தீர்த்தம் நோய் எதிர்ப்பு சக்தியும் சூரிய சக்தியும் நிறைந்த செம்பு உலோக பாத்திரத்தில் வைத்து கொடுப்பர். இந்த தீர்த்தம் பெரும்பாலும் செல்வக்கடவுள் ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலயத்தில் தான் பெரும்பாலும் தவறாமல் அளிப்பார்கள். மற்ற ஆலயங்களில் பால் அபிஷேகத்தின் போது மட்டும் பாலை தீர்த்த பிரசாதமாக வழங்குவார்கள். இந்த புனிதமான தீர்த்தம் மூன்று முறை ஒரு நபருக்கு அளிக்கப்பட வேண்டும். முதல்முறை இருகையும் தாங்கிய வலது உள்ளங்கையில் வாங்கி கை கழுவுவதாக நினைத்து தீர்த்ததால் துடைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து மீண்டும் தீர்த்தம் வாங்கி தலையில் தெளித்துக் கொள்ள வேணடும். மூன்றாம் முறை வாங்கி கண்களில் ஒற்றி உள்ளுக்கு சாப்பிட வேண்டும். இந்த முறை இன்று மக்கள் பின்பற்றுவதில்லை அவர்களே பின்பற்றினாலும் கூட்டம் அதிகம் காரணமாக மூன்று முறை அர்ச்சகரால் தீர்த்தம் வழங்கமுடிவதில்லை. ஒருமுறைதான் வழங்க முடிகிறது. அந்த ஒருமுறை தீர்த்தம் வாங்கும் மக்களும் முதலில் வாயில் வைத்து தீர்த்தத்தை உறிஞ்சி எச்சில் ஆக்கி மீதம் வெறும் ஈர கையை தலையில் தேய்த்துக்கொள்கிறார்கள். இதனால் தரித்திரமே உண்டாகும். தலையில் பட்டது வாய்க்கு வந்தால் மங்களம் நல்லது  வாயில் பட்டது தலைக்கு போனால் அமங்களம் தரித்திரம் ஆகும். எனவே ஒருமுறை தீர்த்தம் வாங்கினாலும் அதை தலையில் மரியாதை நிமித்தமாக தெளித்துக் கொள்க அதுவே சிறப்பு.

கோயில் கும்பாபிஷேக புனித கலச நீரானாலும் தலையில் பட்ட பின்புதான் வாயில்பட வேண்டும். மழைநீராக இருந்தாலும், கங்கையில் இருந்து கொண்டு வந்த நீரானாலும், திருக்குளத்தில் இருக்கும் நீரானாலும் முதலில் தலையில் தெளித்து பின்புதான் அருவருப்பின்றி பருகலாம் .      ( அருவருப்பாக தோன்றுகிறது என்றால் சாப்பிடாமல் இருப்பதே நல்லது ). இவ்வாறாக புனித தீர்த்தத்தை இறைவனை மனப்பூர்வமாக வணங்கி ஏற்று அவரே ஆசி வழங்குவதாக பாவித்து தலை வணங்கி தீர்த்தத்தை தெளித்துக் கொள்ளவும். இவ்வாறு தீர்த்தம் தலையில் பட்டால் ஸ்ரீஹரி மகாவிஷ்ணுவும் லட்சுமி தாயாரும் பரிபூரண ஆசி வழங்கி அருள்புரிவார். காரணம் இருவரும் ஜலத்திற்கும் சுபிட்சத்திற்கும் செல்வத்திற்கும் உரியவர்கள். அவ்வாறு சிரசில் ஜலம்படும் போது பாவம் விலகும். நாம் குளிக்கும் போது கூட தலையோடு சேர்த்து குளிப்பதே சிறந்தது. முதலில் தலையில் தண்ணீர் ஊற்றி பின்புதான் உடலில் ஊற்ற வேண்டும். இவ்வாறு யாரெல்லாம் கடைபிடிக்கிறார்களோ அவர்கள் அனைத்து தரித்திரமும் விலகி புனிதமடைவர்.

இங்கு ஒரு முக்கிய விஷயத்தை அறியவும். ஆலயத்தில் தீர்த்தம் வாங்கி தெளித்துக் கொள்ளும் நேரம் எந்நேரமாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் தலையில் தண்ணீர் ஊற்றி குளிக்கும் நேரம் விடியற்காலை வேளையாக இருந்தால் இரட்டிப்பு நன்மை கிடைக்கும். விடியற்காலை வேளையில் யார் தலைவில் தண்ணீர் பட்டாலும் பிரம்மதேவர் விதியை நல்லவிதமாக மாற ஆசி வழங்குவார். இந்த ஆசியால் ஸ்ரீ லட்சுமி தேவியாரும் தரித்திரம் விலகி சுபிக்ஷம் பெறுக ஆசி வழங்குவார். மேலும் நாளெல்லாம் புத்துணர்ச்சி பொங்கும் வண்ணம் மன உற்சாகம் இருக்கும். தொடர்ந்து வருடம் முழுவதும் முடியாதவர்கள் மார்கழி மாதம் 30 நாளும் கடைபிடித்தால் மிகச்சிறந்த நற்ப்பலனை பெறுவர்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *